கோச்சடையான் பாடல்கள் லிஸ்ட் - சோனி மியூசிக் வெளியிட்டது!

By Shankar

கோச்சடையான் பாடல்கள் லிஸ்ட் - சோனி மியூசிக் வெளியிட்டது!

சென்னை: மார்ச் 9-ம் தேதி வெளியாகவிருக்கும் கோச்சடையான் பட இசைத் தட்டில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பட்டியலை இன்று வெளியிட்டது சோனி மியூசிக் நிறுவனம்.

இந்தப் பட்டியல்படி மொத்தம் 9 பாடல்கள் இசைத் தட்டில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலை அமர கவிஞர் வாலி எழுதியுள்ளார். மற்ற பாடல்களை வைரமுத்து எழுத, ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அவற்றின் விவரம்...

1. எங்கே போகுதோ வானம்..

1. எங்கே போகுதோ வானம்..

எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள இந்தப் பாடல் ஏற்கெனவே ஆடியோ டீசராக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

2. மெதுவாகத்தான்...

2. மெதுவாகத்தான்...

அமர கவிஞர் வாலி எழுதிய பாடல் இது. சூப்பர் ஸ்டாருக்காக அவர் எழுதிய கடைசி பாடல். எஸ் பி பாலசுப்பிரமணியம் - சாதனா சர்க்கம் பாடியுள்ளனர்.

3. மாற்றம் ஒன்றுதான் மாறாதது...

3. மாற்றம் ஒன்றுதான் மாறாதது...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் சொந்தக் குரலில் பாடிய பாடல் இது. ஒரு பாடல் மாதிரி இல்லாமல், வசன கவிதை மாதிரி இந்தப் பாடல் வருகிறது. ரஜினியுடன், ஹரிச்சரணும் பாடியுள்ளார். பாடலில் இடம் பெறும் ஜதி: வி உமாசங்கர்

4. மணப்பெண்ணின் சத்தியம்..

4. மணப்பெண்ணின் சத்தியம்..

இந்தப் பாடலை லதா ரஜினி பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லதா பாடும் திரைப்படப் பாடல் இது.

5. இதயம்...

5. இதயம்...

சீனிவாஸ், சின்மயி குரல்களில் ஒலிக்கும் இந்தப் பாடல் ஒரு டூயட்.

6. கோச்சடையான்...

6. கோச்சடையான்...

இதுதான் படத்தின் தீம் பாடல்.. கேட்க கிட்டத்தட்ட.. தளபதி.. எங்கள் தளபதி பாடல் மாதிரி ஒலிக்கிறது.

7. மணமகனின் சத்தியம்...

7. மணமகனின் சத்தியம்...

ஹரிச்சரண் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். லதா ரஜினி பாடியதன் ஆண் குரல் பதிவு இது.

8. ராணாஸ் டிரீம்

8. ராணாஸ் டிரீம்

ராணாவின் கனவு எனும் பெயரில் வரும் இந்த இசைத் தொகுப்பை, லண்டன் செஸன்ஸ் ஆர்க்கெஸ்ட்ராவைக் கொண்டு உருவாக்கியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

9. கர்ம வீரன்

9. கர்ம வீரன்

இசைத் தட்டின் கடைசிப் பாடல் இது. படத்தின் க்ளைமாக்ஸ் பாடலும் கூட. ஏ ஆர் ரஹ்மானே பாடியுள்ளார். அவருடன் ரைஹானாவும் பாடியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X