கோச்சடையான் இசை வெளியீடு எப்போ தெரியுமா?
சென்னை: கோச்சடையான் இசையை இம்மாத இறுதிக்குள் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதியை நேற்று அதிகாரப்பூர்வ அறிவித்தனர் படத்தயாரிப்பாளர்களான ஈராஸ் - மீடியா ஒன் மற்றும் இயக்குநர் சௌந்தர்யா.

இசை
ஆனால் படத்தின் இசை வெளியீட்டுத் தேதி இதுதான் என்பதை மட்டும் அதில் குறிப்பிடவில்லை. இசை வெளியீடு 11-ம் தேதி, 15-ம் தேதி என இருவேறு தேதிகள் ரசிகர்கள் மத்தியில் அடிபடுகின்றன.

பிப்ரவரி இறுதிக்குள்
இதுகுறித்து விசாரித்தபோது, நிச்சயம் பிப்ரவரி இறுதிக்குள் கோச்சடையான் பாடல்களை வெளியிட்டுவிடுவோம் என்றும், விழா குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

ஏ ஆர் ரஹ்மான்
படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் 5 பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளன. சோனி நிறுவனம் இசையை வெளியிடுகிறது.

ரஜினி பாட்டு
இந்தப் படத்தில் ரஜினி தன் சொந்தக் குரலில் ஒரு வசனப் பாடல் பாடியுள்ளார். ஏற்கெனவே இப்படத்திலிருந்து எங்கே போகும் வானம்.. பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது நினைவிருக்கலாம்.

முன்பதிவு
கோச்சடையான் பட இசைத் தட்டுகளுக்கு முன்பதிவு சூடுபிடித்துள்ளது. பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் கோச்சடையான் இசைத்தட்டுடன் கோச்சடையான் டி ஷர்ட் இலவசமாகத் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications