twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரமாண்டமாக நடந்த கோச்சடையான் இசை வெளியீடு: திரண்டு வந்த திரையுலகம்

    By Siva
    |

    சென்னை: ரஜினிகாந்தின் கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.

    இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

    விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷ்ராப், நாயகி தீபிகா படுகோனே, இயக்குனர்கள் கே. பாலசந்தர், எஸ்.பி. முத்துராமன், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    சத்யம் சினிமாஸுக்கு வந்த ரஜினியை பார்க்க அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஷாருக்கான்

    ஷாருக்கான்

    கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஷாருக்கான் பேசுகையில், தான் இங்கு ஒரு ரஜினி ரசிகனாக மட்டுமே வந்ததாக தெரிவித்தார்.

    தீபிகா

    தீபிகா

    படத்தின் நாயகி தீபிகா படுகோனே பேசுகையில், கோச்சடையான் படம் மூலம் நான் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறேன். உங்களின் ஆதரவை எனக்கு அளிக்க வேண்டும் என்றார்.

    சௌந்தர்யா

    சௌந்தர்யா

    படத்தின் இயக்குனர் சௌந்தர்யா பேசுகையில், கோச்சடையான் ரூ.125 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஜினி கோச்சடையான், ராணா, சேனா ஆகிய 3 கதாபாத்திரங்களில் வருகிறார். இந்த பட ரிலீஸுக்கு பிறகு என் தந்தையின் விருப்பப்படி குழந்தை பெற்றுக் கொள்வேன் என்றார்.

    தனுஷ்

    தனுஷ்

    ரஜினிகாந்தின் மூத்த மருகமன் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்.

    வைரமுத்து

    வைரமுத்து

    விழாவில் வைரமுத்து பேசுகையில், படையப்பா படத்தில் வேலை பார்த்தவர்களுக்கு ரஜினி தங்க சங்கிலி தந்தபோது அதில் மனிதாபிமானம் தெரிந்தது. பாபா படம் தோல்வியடைந்தபோது வினியோகஸ்தரிகளிடம் நஷ்டத்தை தருகிறேன் என்று கூறியபோது அவரின் கொடை உள்ளம் தெரிந்தது. 65 வயது முதல் 25 வயது வரை உள்ள ரசிகரை பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினி தான். அவரது கோச்சடையான் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

    கோச்சடையான்

    கோச்சடையான்

    கோச்சடையான் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் போஜ்புரி ஆகிய ஆறு மொழிகளில் வரும் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    கேன்ஸ்

    கேன்ஸ்

    கேன்ஸ் திரைப்பட விழா முடிந்த பிறகு கோச்சடையான் படத்தை பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பான் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    அமிதாப்

    அமிதாப்

    கோச்சடையான இசையை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வெளியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இசை வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை.

    English summary
    Rajinikanth and Deepika Padukone starrer Kochadaiiyaan audio has been launched in Sathyam Cinemas on sunday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X