தெலுங்குப் படத்துக்கு பின்னணி இசை அமைத்த லேகா ரத்னகுமார்!

By Shankar

Lekha Rathnakumar
விளம்பரப் படங்கள் இயக்குவதில் தனி முத்திரைப் பதித்த லேகா ரத்னகுமார், பின்னணி இசையமைப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இதுவரை தமிழ்ப் படங்களுக்கும், ஒரு ஆங்கிலப் படத்துக்கும் பின்னணி இசை அமைத்து வந்த லேகா ரத்னகுமார், தற்போது '6' என்ற தெலுங்குப் படத்துக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

'கிரியேட்டிவ் மைன்ட் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீகாந்த் லிங்கட் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். ஆர்.ஜே.சதாட்சரன், இப்படத்திற்கு எடிட்டராக பணியாற்றுகிறார்.

ஜெகபதிபாபுவின் 100வது படம் இது. ஹீரோயினாக காயத்ரி அய்யர் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகும் இப்படத்தில் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இப்படத்திற்கு பின்னணி இசை தேவைப்பட்டதாகவும், அதனை தனது ஸ்டுடியோவில் வைத்து முடித்துக் கொடுத்ததாகவும் லேகா ரத்னகுமார் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "பக்கா த்ரில்லர் படம் இது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொண்ட படம் என்பது சில காட்சிகளிலேயே புரிந்தது. அதனால் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இந்தப் படத்திற்கு இசை தந்திருக்கிறேன். பெரிய அளவில் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

உடனிருந்த படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் லிங்கட் கூறுகையில், "லேகா ரதனகுமாரின் பின்னணி இசை நிச்சயம் ஆடியன்ஸை மிரட்டும். நான் எடுத்தபோது பார்த்ததைவிட, பின்னணி இசையுடன் படத்தைப் பார்த்த போது ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்த உணர்வு இருந்தது," என்றார்.

ஸ்ரீகாந்த் லிங்கட் இயக்கும் அடுத்த தெலுங்குப் படத்துக்கும் லேகா ரத்னகுமார்தான் இசை தருகிறார் என்பது கூடுதல் செய்தி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X