லிங்கா ஆடியோ விழா: ரஜினியை கடவுள் ரேஞ்சுக்கு புகழ்ந்த ராக்லைன் வெங்கடேஷ், ஜெகபதிபாபு

By Mayura Akilan

சென்னை: கடவுள் அருளினால் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. அந்த கடவுள் ரஜினிகாந்த் என்று லிங்கா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் குறிப்பிட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. தமிழ் திரையுலகினர் பலரும் திரண்டு வந்துள்ள இந்த விழாவினை நடிகர் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கினார். லிங்கா படத்தின் பாடல்காட்சிகள், ட்ரெயிலர், திரையிடப்பட்டது.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், நடிகர் விஜயகுமார், இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் பேசினர்.

கடவுள் ரஜினி

கடவுள் ரஜினி

ரஜினி தமிழ்நாட்டின் கடவுள் என்று லிங்கா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஜெகபதி பாபு கூறினார். அப்போது அரங்கமே அதிர்ந்தது.

கடவுள் அருளினால்

கடவுள் அருளினால்

கடவுளை நம்பி லிங்கா படத்தை ஆரம்பித்தேன். அவர்தான் நல்லபடியாக முடித்துக்கொடுத்தார். அந்தக்கடவுள் ரஜினி என்று கூறினார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

நாட்டாமை தீர்ப்பு

நாட்டாமை தீர்ப்பு

இந்த நாட்டமை எப்பவுமே தீர்ப்பை மாத்தி சொல்ல மாட்டான் என்று பீடிகையோடு ஆரம்பித்த விஜயகுமார். மக்கள் உங்களுக்கு மிகப்பெரிய விருதை விரைவில் தருவார்கள். அதை ஏற்றுக்கொள்ளுங்கள் ரஜினி அவர்களே என்றார்.

நீங்கதான் தலைவர்

நீங்கதான் தலைவர்

இயக்குநர் சேரன் பேசும் போது, காந்தி, காமராஜருக்கு அப்புறம் உங்களைத்தான் தலைவரா பாக்குறோம். எங்கள் பாசம் உண்மை. உங்களை நம்பிட்டோம் நல்லது பண்ணுங்க என்றார். ரசிகர்களின் சந்தோசத்திற்காக நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டர் சேரன்.

வெறித்தனமான ரசிகர்கள்

வெறித்தனமான ரசிகர்கள்

விழாவில் பேசிய சந்தானம், இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களை பார்த்ததே இல்லை. ரசிகர்களை வெறித்தனமாக நேசிக்கரை நடிகரையும் பார்த்தது இல்லை என்றார் சந்தானம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X