Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- News
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு குரங்கு அம்மை பரிசோதனை... விமான நிலையங்களுக்கு உத்தரவு
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு… மாமனிதன் இசைவெளியீட்டு விழாவில் நெகிழ்ந்த விஜய்சேதுபதி!
புதுவை : யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, தனக்கு கிடைத்து இருப்பதாக மாமனிதன் இசைவெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி நெகிழ்ந்து பேசினார்.
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதியுடன் 4வது முறையாக இணைந்த படம் மாமனிதன்.
கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது. தற்போது மே 20ந் தேதி ரிலீசாக உள்ளது.
மொக்க
கதையை
கூட
கேக்க
சொன்னார்
விஜய்சேதுபதி..
அப்படியே
ஃபாலோ
பண்ணும்
ஐஸ்வர்யா
ராஜேஷ்!

மாமனிதன்
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுவை மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். படத்தில் முதன்-முதலாக இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

டிரைலர் வெளியீடு
விழாவில் மாமனிதன் படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்கள் வெளியிடப்பட்டது. இதனை நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரைப்படக் குழுவினர் வெளியிட்டனர்.

மனித உணர்வுகளை உயிரூட்டும் படம்
விழாவின் பேசிய நடிகர் விஜய் சேதுபதி. புதுச்சேரிக்கு பலரும் தங்களின் இளமை காலத்தை கொண்டாட வந்ததாக கூறினார்கள். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மாமனிதன் திரைப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய காலகட்டத்தில் மனித உணர்வுகளை உயிரோடு திரைப்படத்தில் காட்ட முடியும் என்றால் அது இயக்குநர் சீனு ராமசாமியால் தான் முடியும், மக்கள் கொண்டாடும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமியால் தான் எடுக்க முடியும் என்றார்.

பெரும் மகிழ்ச்சி
மேலும், தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இப்படத்தில் இணைந்து இசையமைத்துள்ளார்கள் எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது எனக்குத் தெரியாது, இவர்கள் இருவரும் இசையமைத்த படத்தில் தான் நடித்துள்ளது பெருமையாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.