சிம்புவின் மாநாடு… நீ வேற நானும் வேற லிரிக் வீடியோ!

சென்னை : மாநாடு திரைப்படத்தின் நீ வேற நானும் வேற பாடலில் லிரிக் வீடியோவை யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோக வெளியான சில மணிநேரத்திலே இந்த பாடலை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மாநாடு திரைப்படம் நவம்பர் 25ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

மாநாடு

மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதி ராஜா, ஒய்ஜி மகேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசை

யுவன் சங்கர் ராஜா இசை

யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் த்ரில்லர் மூவி

அரசியல் த்ரில்லர் மூவி

இந்தியாவின் முதல் அரசியல் டைம் லூப் படம் இது. அரசியல், த்ரில்லர் படமான இந்த படத்தில் சிம்பு எஸ்ஜே சூர்யா இடையேயான காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். முதலமைச்சரின் அரசியல் மாநாட்டில் ஒரு சாமானிய மனிதனுக்கும், போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் மோதல்கள் தான் படத்தின் கதை. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது.

கண்கலங்கிய சிம்பு

கண்கலங்கிய சிம்பு

இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர், இந்த படம் வெளியாவதற்குள் நான் அதிகமாக கஷ்டப்பட்டு விட்டேன். எனக்கு நிறைய பிரச்சினை கொடுக்கிறார்கள். படத்தை வெளியிடவிடாமல் பலர் தடுத்தார்கள் என்று கண்கலங்கி பேசினார்.

நீ வேற நானும் வேற

இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் நீவேற நானும் வேற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை யுவன்சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி உள்ளது. சிம்பு பாடி உள்ள இந்த பாடலை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X