டிவிட்டரில் திடீரென ட்ரென்ட்டாகும் மாறா தீம்.. மேட்டர் என்னன்னு பாருங்க மக்களே! #MaaraTheme
Recommended Video
சென்னை: சூரரை போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மாறா பாடலின் தீம் டிவிட்டரில் திடீரென ட்ரென்ட்டாகி வருகிறது.
சூர்யா நடித்து சுதா கே பிரசாத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரை போற்று. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.
இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர். நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட்டாக நடித்துள்ளார்.

சூரரை போற்று டீசர்
சூரரை போற்று படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

தீனி போடும்
படத்தின் டீசரை பார்த்துவிட்டே படம் நிச்சயம் சூர்யாவின் நடிப்பு பசிக்கு தீனிபோடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அந்தளவுக்கு சிறப்பாய் இருந்தது சூரரை போற்று படத்தின் டீசர்.
சிறிய வீடியோ
"மாறா" இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் சூர்யா பாடும் ஒரு சிறிய வீடியோ ஒன்றையும் ஜிவி பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

ட்ரென்டிங்கில் டாப்
இந்த வீடியோ இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. மேலும் சூர்யாவின் ரசிகர்கள் #MaaraTheme என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.


Click it and Unblock the Notifications











