வெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா
Recommended Video

மாரிஸ் ஆனந்தியை தேனாய் பாடிய இளையராஜா..வீடியோ
சென்னை: மாரி 2 படத்தில் வரும் மாரிஸ் ஆனந்தி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள மாரி 2 படம் வரும் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. எத்தனை படங்கள் வந்தாலும் ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை என்று தனுஷ் உறுதி செய்துள்ளார்.

மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி, மாரி கெத்து ஆகிய இரண்டு பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இசைஞானி இளையராஜா தனது மகன் யுவனின் இசையில் பாடிய மாரிஸ் ஆனந்தி பாடலின் லிரிக்கல் வீடியோ டிசம்பர் 10ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தனுஷ் அறிவித்தார்.
அறிவித்தபடி லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. தனுஷ் எழுதிய வானம் பொழியாம பூமி வெளையுமா கூறு என்று துவங்கும் பாடலை இளையராஜா, மானசி ஆகியோர் பாடியுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications