கமல் வெளியிட சூர்யா பெற்றுக்கொண்ட மாலினி 22 பாளையம் கோட்டை

By Mayura Akilan

சென்னை: மாலினி 22 பாளையம்கோட்டை படத்தின் ஆடியோ, ட்ரெயிலர் வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி இயக்குநர் பாலச்சந்தர், நடிகைகள் ஸ்ரீபிரியா, ராதிகா, லதா, சுகாசினி உள்ளிட்ட பிரபல திரை உலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

நடிகை ஸ்ரீப்ரியா இயக்கத்தில் க்ரிஷ் சத்தார், நித்தியா மேனன் நடித்திருக்கும் படம் 'மாலினி 22 பாளையம் கோட்டை'. அரவிந்த் சங்கர் இசை அமைக்கும் இந்தப் படத்தின் ஆடியோ இன்று வெளியானது.

மலையாளத்தில் ஆஷிக் அபு இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில், ரீமா கல்லிங்கல் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற '22 ஃபீமெயில் கோட்டயம்' படம் தான் தமிழில் 'மாலினி 22 பாளையம் கோட்டை'யாக ரீ-மேக் ஆகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்ரீப்ரியா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் இது.

கமல் வெளியிட்ட ஆடியோ

கமல் வெளியிட்ட ஆடியோ

மாலினி 22 பாளையம் கோட்டை படத்தின் பாடல் கேசட்டை நடிகர் கமல் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்

டிரெய்லர் வெளியீடு

டிரெய்லர் வெளியீடு

படத்தின் ட்ரெயிலரை இயக்குநர் பாலச்சந்தர் வெளியிட நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.

நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார்

படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். அரவிந்த் சங்கர் இசையமைத்துள்ளார்.

பிரபல நடிகைகள்

பிரபல நடிகைகள்

ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த பிரபல நடிகைகள் லதா, ராதிகா. சுகாசினி தன்னுடைய ஆட்டோகிராப்பை பதிவு செய்கிறார்.

நடிகை ஸ்ரீபிரியா

நடிகை ஸ்ரீபிரியா

எழுபதுகளின் பிற்பகுதியில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ஸ்ரீப்ரியா. ரஜினியுடன் அதிகப் படங்களில் நடித்தவர்களில் ஒருவர். தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில படங்களில் நடித்த ராஜ்குமாரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார்.

சினிமா இயக்குநராக

சினிமா இயக்குநராக

தொலைக்காட்சிகளிலும், சினிமாவிலும் தலை காட்டி வந்த ஸ்ரீப்ரியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது படம் இயக்குகிறார். இந்தப் படத்தை அவரது கணவர் ராஜ்குமாரே தயாரிக்கிறார்.

மலையாள ரீமேக்

மலையாள ரீமேக்

மலையாளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய '22 பீமேல் கோட்டயம்' என்ற படத்தைத்தான் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குகிறார். இப்படத்திற்கு தமிழில் 'மாலினி 22 பாளையங்கோட்டை' என்று பெயரிட்டுள்ளர்.

தமிழ், தெலுங்கில்

தமிழ், தெலுங்கில்

முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் கணவர் தயாரிக்க ஸ்ரீபிரியா இயக்குகிறார். நித்யா மேனன் கண்கள் ஸ்ரீபிரியாவிற்கு ரொம்பப் பிடிக்குமாம். அதனால் கதாநாயகியாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீபிரியா.

நீயா- நானே வருவேன்

நீயா- நானே வருவேன்

ஸ்ரீபிரியா ஏற்கனவே நீயா, நானே வருவேன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X