மணம் கொண்ட காதல்.... ஒரு நாயகன்… இரு நாயகி
திருமணத்திற்கு முன்னால் காதலிப்பது மட்டும் காதல் அல்ல. கல்யாணத்திற்குப் பின் காதலிப்பது தான் உண்மையான காதல் என்பதை உணர்த்துவது தான் "மணம் கொண்ட காதல்" படத்தின் கதை.
ரித்திஸ் ஹரிஸ் மூவீஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கும் "மணம் கொண்ட காதல்" என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது . இப்படத்தை P.முத்துராமலிங்கம் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சமீபத்தில் நடைபெற்றது. இது மனம் இல்ல. மணம்... வாசனை, ஸ்மெல்' என்று நாலாவகையிலும் போராடி தலைப்பில் இடம் பெற்ற 'மணம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் சொன்னார்கள்.

இரண்டு கதாநாயகிகள்
இப்படத்தில் முத்துராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக நோபியா மற்றும் ஸ்ரியா என்பவரும் அறிமுகமாகிறார்கள்.

தயாரிப்பாளரே ஹீரோவாக
டைரக்டர் புகழேந்திராஜ் இவரிடம் கதை சொல்லப் போக, முழு கதையையும் கேட்ட முத்துராம், யாரை ஹீரோவா நடிக்க வைக்கப் போறீங்க என்று கேட்க, நல்ல ஹீரோவா தேடிக்கிட்டு இருக்கேன் என்றாராம் அவர். அதற்கப்புறம் ஒரு வாரம் ஆச்சு. ஹீரோ கிடைச்சாச்சா... ஹீரோ கிடைச்சாச்சா... என்று தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டேயிருக்க, இல்லைங்க இல்லைங்க என்று சொல்லிக் கொண்டேயிருந்தாராம் புகழேந்திராஜ். அதற்கப்புறம் பொறுக்க முடியாமல் முத்துராம். ஏன்... நானே ஹீரோவா நடிக்கிறேனே? என்று கேட்டாராம் இதை பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ஒருவர் கூறினார்.

நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன்
படத்தில் நிழல்கள் ரவி, பாண்டு, மீராகிருஷ்ணன், பெஞ்சமின், மாஸ்டர் கணேஷ், நமோ நாராயணன், காதல் அருண் ,கம்பம் மீனா, பசங்க செந்தி ,முனிராஜ், செல்வம், பானுஷா , தங்கவேல் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

புகழேந்திராஜ் இயக்கத்தில்
இப்படத்தினை எழுதி இயக்குகிறார் இயக்குனர் புகழேந்திராஜ். இசையமைப்பாளர் விக்ரம் வர்மன் இசையில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களைப் வைர பாரதி, கலைக்குமார், கோவைதனபால், ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் ஒரு பாடலை இயக்குனர் புகழேந்திராஜ் பாடியுள்ளார். இசை நேர்த்தியாக வரிகள் புரிகிற மாதிரியாக ரசிக்கும்படியாக உள்ளது.


Click it and Unblock the Notifications