180 ஆடியோ: வெளியிட்டார் மணிரத்னம்!
சத்யம் சினிமாஸ் தயாரித்துள்ள இரண்டாவது படம் 180. இதன் ஆடியோவை நேற்று வெளியிட்டார் இயக்குநர் மணிரத்னம்.
சத்யம் சினிமாஸ் மற்றும் அகல் பிலிம்ஸ் இணைந்து 180 என்ற படத்தைத் தயாரித்துள்ளன.
ஜெயேந்திரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. மணிரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், நடிகர்கள் ஜெயம் ரவி, ஆர்யா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோரும் நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்திப் பேசினர்.
படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை, மேடையிலேயே இசைக்குழுவினர் பாடினர். பின்னர் இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரைலர் திரையிடப்பட்டது.
படத்தை சத்யம் சினிமாஸ் தயாரித்திருந்தாலும், இந்த நிறுவனத்தின் கிரண் ரெட்டி, ஸ்வரூப் ரெட்டி இருவருமே நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











