கடற்கரையில் நடந்த 'மெரினா' இசை வெளியீடு!

By Shankar

மெரினா என்று படத்துக்கு பெயர் வைத்துவிட்டு, ஏதாவது அரங்குக்குள் இசையை வெளியிட்டால் சரியாக இருக்குமா.... அதனால், சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் மத்தியிலேயே இன்று காலை இசையை வெளியிட்டு வித்தியாசம் காட்டினார் பசங்க, வம்சம் தந்த இயக்குநர் பாண்டிராஜ்.

கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் இந்த இசை வெளியீடு நடந்தது. இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னதாக மெரினாவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று விழிப்புணர்வை இயக்குனர்கள் பாண்டிராஜ், தங்கர்பச்சான் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இப்படத்தின் இசை - பாடல்களை இயக்குனர் அமீர் வெளியிட இயக்குனர் சசிகுமார் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் இயக்குனர்கள் சுசீந்திரன், எஸ்.பி. ஜனநாதன், சமுத்திரக்கனி, இப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி ஓவியா, இப்படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் கூறுகையில், "மெரினா பலவிதாமன சுவாரசியங்களை உள்ளடக்கிய கடற்கரை. நான் மெரினாவைப் பற்றி படமெடுப்பேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ஓவியா ஆகியோர் காதல் ஜோடிகளாக மட்டுமின்றி கலகப்பான ஜோடியாக வலம் வருவார்கள். இன்னும் நீங்கள் பார்த்த, பார்த்திராத விஷயங்களை இந்த மெரினாவில் கொடுத்திருக்கிறேன்.

மெரினா கடற்கரையைப் பற்றியும், இரண்டு சிறுவர்களின் நட்பை பற்றியும் பல வித்தியாசமான பாடல்களை இப்படத்தில் கொடுத்திருக்கிறோம். நா. முத்துக்குமார் சென்னையைப் பற்றி ஒரு அட்டகாசமான பாடல் எழுதியிருக்கிறார். அவசியம் பாருங்கள், மெரினா நினைவில் நீங்காத படமாக அமையும்," என்றார்.

மெரினா' இசை வெளியீடு- வீடியோ

More from Filmibeat

Read more about: marina மெரினா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X