Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெளியானது மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி ஸ்டோரி பாடல்.. ஒரே இங்கிலிஷ்தான்.. நோ டென்ஷன் பேபி.. மரண மாஸ்!
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகியுள்ளது.
பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
விஜய்க்கு வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மேலும் ஷாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா ஜெர்மையா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இசையமைபப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெற்றி கொண்டாட்டத்தில் ஓ மை கடவுளே டீம்.. அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஸ்பெஷல் பேட்டி!
அறிவிப்பு
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்காளக நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் ஷுட்டிங் நடைபெற்றது. இந்த ஷுட்டிங் கடந்த 10 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்த முக்கிய அறிவிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது. அதாவது மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் காதலர் தினமான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
காதலர் தினம்
இதனை சோனி மியூஸிக் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்ட சோனி நிறுவனம் ஆட்டம் ஆரம்பம் என்றும் ஒரு குட்டி கதை வெய்ட்டிங்.. அந்தக் கதை பிப்ரவரி 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு சொல்லப்படும். தளபதியின் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கில் ட்ராக் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவித்து மாஸ் காட்டியது.
ஒரு குட்டி ஸ்டோரி
ஒரு குட்டி ஸ்டோரி என தொடங்கும் அப்பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இது. ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள' பாடலை பாடியிருக்கிறார் நடிகர் விஜய். பிகில் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடல் பெறும் ஹிட்டடித்தது.
லெட் மி சிங்..
இதனை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடிகர் விஜய் பாடியிருக்கிறார். இந்திப் பாடலை கனா படத்தின் இயக்குநரும் நெருப்புடா பாடலை பாடியவருமான அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கிறார். அறிவித்தப்படி இன்று மாலை 5 மணிக்கு மாஸ்டர் படத்தின் லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என்று தொடங்கும் பாடல் வெளியானது.
ஜஸ்ட் லிசன் புரோ
நடிகர் விஜய் இந்த பாடலின் சிங்கிள் ட்ராக்கை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏராளமான ஆங்கில வார்த்தைகளுடன் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி பே அட்டென்ஷன் லிஸன் டு மி.. ஜஸ்ட் லிசன் புரோ.. வேணாம் டென்ஷன்.. லைப் இஸ் ஷார்ட்.. பி ஹேப்பி என அதிகளவில் ஆங்கில வார்த்தைகளும் தமிழ் வார்தைகளும் கலந்துகட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
அள்ளும் வியூஸ்
இந்த பாடல் வெளியான சில நிமமிடங்களிலேயே நான்கு லட்சம் வியூஸ்களை அள்ளியிருக்கிறது. இதேபோல் பாடலுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.பாடல் வெளியீட்டை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியர் என்பதால் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
|
ட்ரென்டிங்
எப்போது மணி 5 ஆகும் மாஸ்டர் சிங்கிள் ட்ராக்கை கொண்டாடலாம் என காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் பாடல் வெளியானதும் திருவிழா போல கொண்டாடி தீர்க்கின்றனர். டிவிட்டரிலும் #Orukuttykathai, #KuttiStory, #Master, #Mastersingletrack ஆகிய ஹேஷ்டேக்ஸ் ட்ரென்ட்டாகி வருகிறது.