250 மில்லியனை கடந்த வாத்தி கம்மிங்; கொண்டாட்டத்தில் டிரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற விஜய்யின் 'வாத்தி கம்மிங்' பாடல் 250 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.

Master ‘Vaathi Coming’ song crosses 250 Million milestone in Youtube!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

கொரோனாவுக்கு பிறகு தியேட்டருக்கு வராத மக்கள் கூட்டத்தை மாஸ்டர் வரவைக்க பல புதிய படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக தயாராகின.

அனிருத் இசையில் விஜய்யின் அதிரடியான நடனத்தில் உருவான வாத்தி கம்மிங் பாடல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளை கடந்து வாத்தி கம்மிங் பாடல் சாதனை படைத்துள்ளதை ரசிகர்கள் #250MForVaathiSupremacy என்ற ஹாஷ்டேக்கை போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கோலிவுட்டில் இந்த உச்சத்தை தொட்ட 3வது பாடல் வாத்தி கம்மிங் என்கிற பெருமையை பெற்றுள்ளது.

அதே நேரத்தில் 2.6 மில்லியன் லைக்குகளை கடந்த இரண்டாவது பாடல் என்கிற சாதனையையும் மாஸ்டரின் வாத்தி கம்மிங் பெற்றுள்ளது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.

அந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்து வரும் நிலையில், பீஸ்ட் பட பாடல்களும் மாஸ்டர் பாடல்களை போலவே பல மடங்கு சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X