அடுத்த வாரம் கோலிவுட்டை மிரட்டவரும் பிரமாண்ட இசை வெளியீட்டு விழாக்கள்!
தமிழ் சினிமாவின் இரண்டு மிகப் பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் அடுத்த வாரம் சென்னையில் நடக்கவிருக்கின்றன.
இந்த விழாக்கள் குறித்து இப்போதிலிருந்தே வெகு ஆர்வமாக ரசிகர்கள் விசாரித்து வருகின்றனர்.
முதல் விழா, ஷங்கரின் ஐ பட இசை வெளியீடு. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள படம் இது.

ரஜினி - அர்னால்ட்
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்தும், ஹாலிவுட் நடிகர் அர்னால்டும் பங்கேற்கின்றனர். அர்னால்டைக் காணவும், அவரும் ரஜினியும் பங்கேற்கும் அந்த மேடையைக் காணவும் பெருந்திரளான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டிக்கெட் கொடுத்தாவது பார்க்கத் தயாராக இருப்பதாகக் கூறி வருகின்றனர்.

நேரு உள் விளையாட்டரங்கம்
செப்டம்பர் 15-ம் தேதி திங்கள் கிழமை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த விழா நடக்கிறது. தமிழ் சினிமாவின் பிரபலங்களுடன் பாலிவுட் பிரபலங்களும் பங்கேற்கின்றனர்.

கத்தி
இரண்டாவது முக்கியமான நிகழ்ச்சி.. விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் இசை வெளியீடு. இந்தப் படத்துக்கு முன் நிற்கும் எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் இசை குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது ரசிகர்களுக்கு.

விஜய் - அனிருத்
விஜய்யும் அனிருத்தும் முதல் முறையாக இணைந்துள்ள படம், அதில் விஜய்யின் குரலில் இடம் பெறும் பாடல் என எதிர்ப்பார்க்க நிறைய விஷயங்கள். இந்தப் படத்தின் இசையை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கத்தி மூலம் முதல் முறையாக ஆடியோ மார்க்கெட்டில் நுழைகிறது ஈராஸ்.

செப்டம்பர் 18
இந்த விழா வரும் செப்டம்பர் 18-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இன்னும் அழைப்பிதழ்கள் தரப்படாததால், எந்த இடம் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











