மரக்கார் படத்தின் இளவெயில் லிரிக் வீடியோ பாடல்... அனைத்து மொழிகளிலும் வெளியானது
திருவனந்தபுரம் : நடிகர் மோகன்லால் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மரக்கார் படம் வரும் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளது.
வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இளவெயில் லிரிக் வீடியோ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் மோகன்லால்
நடிகர் மோகன்லால் மற்றும் இயக்குநர் பிரியதர்ஷன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் மரக்கார். மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. வராற்றுப் பின்னணியில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியுள்ளது.

டிசம்பர் 2ல் ரிலீஸ்
படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீசுக்காக தயாராகி காத்திருந்தது. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் படம் வரும் டிசம்பர் 2ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

தமிழில் தயாரிப்பாளர் தாணு வெளியீடு
தமிழில் இதன் வெளியீட்டு உரிமையை கலைப்புலி எஸ் தாணு கைப்பற்றியுள்ளார். தமிழில் அதிகமான திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்தில் பிரபு, அர்ஜுன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் உள்ளனர்.

சூட்டிங் வீடியோ வெளியீடு
மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், பிரபு, அர்ஜூன், சுனில்ஷெட்டி, ப்ரணவ் மோகன்லால் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது. அதில் படத்தின் பிரம்மாண்டம் வெளிப்படையாக தெரிந்தது.
லிரிக் வீடியோ பாடல் வெளியீடு
இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகள் சிறப்பான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வப்போது போஸ்டர்கள், சூட்டிங் வீடியோ உள்ளிட்டவை வெளியிடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது படத்தின் இளவெயில் என்ற லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து மொழிகளிலும் வெளியீடு
இந்த லிரிக் வீடியோவும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது. தமிழில் இந்தப் பாடலை சத்யபிரகாஷ் மற்றும் சின்மயி பாடியுள்ளனர். பாலா பாடல் வரிகளை எழுதியுள்ளார். படத்தை ஆன்டணி பெரும்பாவூர் மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











