மூணு மூணு மூணு படத்தோட கலக்கல் பாட்டு... ஜிவி பிரகாஷ் பாடியிருக்காரு!

சென்னை : நடிகர் சாண்டி, கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள படம் மூணு மூணு மூணு.

இந்தப் படம் நம்பிக்கை சந்த்ரு என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. ஹாரர் காமெடியாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் பாடலை பாடியுள்ளார்.

மூணு மூணு மூணு படம்

மூணு மூணு மூணு படம்

நடிகர் சாண்டி, இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திகில் படம் மூணு மூணு மூணு. படத்தில் சரவணன் மற்றும் ரேஷ்மா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். ஜீவிதா கிஷோர் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஹர்ஷவர்தன் இசையமைப்பு

ஹர்ஷவர்தன் இசையமைப்பு

படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி சிறப்பான வரவேற்பையும் ரசிகர்களிடையே ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. நடன இயக்குநராக இருக்கும் சாண்டி இந்தப் படத்தின்மூலம் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். பிக் பாஸ் மூலமாக அவருக்கு பல படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

நடன இயக்குநர் சாண்டி

நடன இயக்குநர் சாண்டி

நடன இயக்குநராகவும் அவர் விக்ரம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தில் தினந்தோறும் 3 :33 மணிக்கு விடாமல் சாண்டியை துரத்தில் ஆவியை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

333 எண்ணே வில்லன்

333 எண்ணே வில்லன்


666 என்ற எண்ணை போலவே 333 என்ற நம்பரும் ஆவியுடன் தொடர்பு படுத்தி பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள படத்தின் இயக்குநர், இந்தப் படத்தில் அந்த எண்ணே வில்லனாக இருக்கிறது. தற்போதைய காலகட்டங்களில் திகில் படங்களை பார்த்து மக்கள் பயப்படுவதை விட்டுவிட்டு காமெடியாக பார்க்கிறார்கள். அதை தன்னுடைய படம் மாற்றும் என்றும் கூறியுள்ளார்.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் பாடல் ஒன்றை படக்குழுவினர் தற்போது ரிலீஸ் செய்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இந்த பாடலை பாடியுள்ளார். மூணு மூணு மூணு என்று அந்தப் பாடல் துவங்குகிறது. பாடல் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

காமெடி ஹாரர் படம்

காமெடி ஹாரர் படம்

தமிழ்நாட்டில் சமீபகாலங்களில் காமெடி ஹாரர் படங்களுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. அந்த வகையில் இந்தப் படமும் காமெடி கலந்த ஹாரர் படமாக வெளிவந்துள்ளது. மற்ற படங்களை போல இந்தப் படமும் ரசிகர்களை கவருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X