முகன் ராவின் சத்தியமா நான் சொல்லுறண்டி .. அனிரூத் வாழ்த்து !

சென்னை : பிக்பாஸ் புகழ் முகன் ராவின் ஹிட் பாடலான சத்தியமா நான் சொல்லுறண்டி பாடல் ஆல்பமாக வெளியாகுகிறது.

பிக்பாஸ் சீசன் 3யின் வெற்றி நாயகன் முகன் ராவ். தன் நேர்மையான செயல்களாலும் பாட்டுத் திறமையாலும் ரசிகர்கள் இதயங்களை கொள்ளை கொண்டு பிக்பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னரானார். பிக்பாஸ் வீட்டில் முகன் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கும் பல சமயங்களில் தன்னுடைய பாடல் திறமையால் உள்ளே இருக்கும் சக ஹவுஸ்மெட்களை சந்தோஷப்படுத்தினார்.

Mugen Raos Sathiyama song

இவ்வாறு ஒரு முறை தானே எழுதி அதுவரையில் எங்கும் பாடாத சத்தியமா பாடலை தன் நண்பர்களுக்காகவும், மக்களுக்காகவும் பாடினார். இவர் பாடிய இந்த எபிஸோட் பல லட்சம் மக்களால் திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது. மக்கள் அனைவருக்கும் முகன் பாடிய சத்தியமா பாடல் மிகவும் பிடித்து போக பலரும் அந்த பாடலை பெரிய அளவில் கொண்டாடினர்.

Mugen Raos Sathiyama song

அந்த பாடலின் வெற்றியை வீட்டின் உள்ளிருந்த படியே உணர்ந்த முகன் ராவ் அந்த பாடலை தான் கட்டாயமாக ஆல்பமாக்குவேன் என்று கூறி இருந்தார். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இரு முறை அந்த பாடலை பாடி இருக்கிறார். தற்போது முகன்ராவ் அந்த பாடலை ஆல்பமாக உருவாக்கி உள்ளார். அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடலான சத்தியமா பாடல் வரும் வெள்ளி கிழமை அன்று அதாவது உழைப்பாளர் தினமான மே 1 அன்று ஆல்பமாக வெளியாக உள்ளது.

Mugen Raos Sathiyama song

முகன் ராவ், இதற்காக யூடியூப்பில் ஒரு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இசையமைப்பளர் அனிரூத் முகனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். சத்தியமா பாடலை பிரியா சங்கரி என்பவருடன் இணைந்து பாடியுள்ளார் முகன். இந்த பாடலை மலேசியாவில் இருக்கும் தன் நண்பர்களின் துணையோடு தயாரித்துள்ளார்.

Mugen Raos Sathiyama song

சத்தியமா பாடலை ஐபிபி ஸ்டூடியோஸ் என்ற யூடியூப் சேனலின் மூலம் வெளியிடுகிறார் முகன். இந்த யூடியூப் சேனலில் தான் முகனின் முந்தைய பாடல்களும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் ஆல்பத்தை ஆர்ட் பேஸ்ட் பாடலாக வெளியிட உள்ளனர். அதாவது பாடல் முழுவதும் வரையபட்டது போல் இருக்கும் இந்த வடிவில் புது முயற்சியாக பாடலை வெளியிட உள்ளனர் முகன் மற்றும் அவரது நண்பர்கள்.

More from Filmibeat

Read more about: album ஆல்பம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X