நாய்க்குட்டிக்கும் சிறுமிக்குமான பாசப்போராட்டத்தை சொல்லிய படம்... 2வது பாடல் வெளியீடு

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி தனது மகள் ஸ்ரீஜாவுடன் இணைந்து நடித்து வெளியான படம் முகிழ்.

நாய்க்கும் ஒரு சிறுமிக்குமான பாசப் போராட்டத்தை இந்தப் படம் கதைக்களமாக கொண்டிருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது வீடியோ பாடலை தற்போது விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சில படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மகள் ஸ்ரீஜாவுடன் அவர் இணைந்து முகிழ் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த மாதத்தில் அது திரையரங்குகளில் ரிலீசானது.

பாசப் போராட்டம்

பாசப் போராட்டம்

படத்தில் ஒரு நாய்க்குட்டிக்கும் சிறுமிக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை கதைக்களமாக கொண்டு கார்த்திக் சுவாமிநாதன் என்பவர் இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தநிலையில் விஜய் சேதுபதி வழக்கம்போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

பாசமிகு தந்தை

பாசமிகு தந்தை

பாசமிகு தந்தையாக அவரது நடிப்பு படத்தில் மிளிர்ந்தது. இதேபோல அவருடைய மனைவியாக நடித்திருந்த ரெஜினா கசாண்ட்ராவின் நடிப்பும் பாராட்டப்பட்டது. மன அழுத்தத்திற்கு உள்ளான தனது மகளை அதிலிருந்து மீட்க போராடும் தயாராக அவர் தனது பரிதவிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

 முதல் வீடியோ பாடல்

முதல் வீடியோ பாடல்

ஸ்ரீஜாவிற்கு இது முதல் படம் என்பதால் அவரிடம் நடிப்பில் முதிர்ச்சி காணப்படவில்லை என்ற போதிலும் கேரக்டருக்கு தேவையான நடிப்பை அவர் வழங்கியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் வீடியோ பாடலை கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

2வது வீடியோ பாடல்

2வது வீடியோ பாடல்

இந்தப் பாடலுக்கு சிறப்பான வரவேற்பு காணப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது வீடியோ பாடலை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். ஓயாத அலை போல என்று துவங்கும் அந்தப் பாடல் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பெற்றோர் மற்றும் அவரது குழந்தையின் அழகான தருணங்களை இந்தப் பாடல் கொண்டுள்ளது.

இசையமைப்பாளர் ரேவா

இசையமைப்பாளர் ரேவா

பெண் இசையமைப்பாளர் ரேவா இசையில் இந்தப் பாடல் கவிதையாய் மனதை வருடுகிறது. மணல் பரப்பில் காலை நுழைத்து சிறப்பான மற்றும் இயல்பான நிகழ்வுகளை இந்தப் பாடல் பெற்றுள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் இந்தப் பாடல் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X