இன்று மதியம் 1மணிக்கு..யூடியூப் நேரலையில் அனிரூத்தின் இசை நிகழ்ச்சி!

சென்னை : இசையமைப்பாளர் அனிரூத் யூடியூப்பில் நேரலையில் இசை நிகழ்ச்சி ஒன்றை இன்று மதியம் 1மணிக்கு நடத்த உள்ளார். இதை பற்றிய அறிவிப்பை தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிரூத் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் அடிக்கடி நேரலையில் வந்து ரசிகர்களுடன் பல தகவலை பகிர்ந்து கொள்வார். அனிரூத் சமீபகாலமாக தெலுங்கு சினிமாவிலும் இசையமைத்து வருவதால் இவரின் சமூக வலைத்தள பக்கங்களுக்கு பல தெலுங்கு சினிமா ரசிகர்களும் வந்து தங்களின் அன்பை பகிர்வது வழக்கமாய் வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிக படியான ரசிகர்கள் இருக்கும் ஒரு முக்கிய இசையமைப்பாளராக அனிரூத் உருவாகியிருக்கிறார்.

 Music composer Anirudh is going to host a YouTube live concert

தற்போது கொரோனா சமயத்தில் மக்களை மனதைரியத்துடன் வைத்து கொள்ள பல பிரபலங்களும் முயற்சி செய்து வருகின்றனர். பலரும் தங்களின் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பல விஷயங்களை மக்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். இதன் வாயிலாக மக்களை வீட்டில் இருந்த படியே உற்சாக படுத்த அனிரூத்தும் களம் இறங்கியுள்ளார் .

 Music composer Anirudh is going to host a YouTube live concert

இன்று மதியம் 1மணிக்கு யூடியூப்பில் நேரலையில் வந்து இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் அனிரூத். இந்த நிகழ்ச்சிக்கு "ஒன் நேசன்" என்று தலைப்பு வைக்கபட்டுள்ளது. இந்த நேரலையில் இந்தியாவின் பிரபலமான யூடியூப்பர்கள் மற்றும் பல முக்கிய கலைஞர்களும் கலந்து கொள்ள உள்ளதாக அனிரூத் தெரிவித்து இருக்கிறார் .

 Music composer Anirudh is going to host a YouTube live concert

மேலும் இந்த நேரலை இசை நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் பணத்தை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு அளிக்க இருப்பதாக கூறியிருக்கிறார். அனிரூத் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு திரையுலகத்தில் இருந்தும் ரசிகர்களிடம் இருந்து பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அனிரூத் எத்தனையோ பெரிய இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல முக்கிய இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். இவரின் இசை நிகழ்ச்சி உலகின் எந்த மூலை முடுக்கில் நடந்தாலும் அங்கு இவருக்கென ரசிகர்கள் வந்து குவிந்து விடுவார்கள். இது பெரிய இசையமைப்பாளர்களுக்கே சாத்தியமான விஷயம் ஆனால் அனிரூத்திற்கு மிக சிறிய கால கட்டத்தில் நடந்தது அனிரூத்தின் திறமையை குறிக்கிறது.

 Music composer Anirudh is going to host a YouTube live concert

Recommended Video

Exclusive: Master official Release date | Lokesh Kanagaraj

அனிரூத்தின் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்பதனால் இந்த நேரலை இசை நிகழ்ச்சியை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் இணையத்தில் ஒரு மணிக்கு கூடுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது இதே நேரத்தில் உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை காணும் போது நல்ல நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X