Ilayaraja: எனக்கு மியூசிக் தெரியாது.. இசை குறித்து இளையராஜா.. ஹைலைட் கமெண்ட் கொடுத்த கமல்ஹாசன்!
சென்னை: இசைஞானி, ராகதேவன் என பல்வேறு அடைமொழிகளால் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. 80 வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து தன்னுடைய இசை ஆக்கிரமிப்பை செய்து வருகிறார். இவரது இசையமைப்பில் தற்போதும் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளையராஜா இசையில் வெளியான விடுதலை 2 படம் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் வரும் பொங்கலையொட்டி இவரது இசையில் படைத்தலைவன் படம் ரிலீசாகவுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார் இசைஞானி.

இசைஞானி இளையராஜா: பல ஆண்டுகளாக முன்னணி இசைக்கலைஞராக ராகதேவனாக, இசைஞானியாக தன்னை ரசிகர்களிடையே இணைத்து வருகிறார் இளையராஜா. ராசய்யா என்ற தன்னுடைய இயற்பெயரை ராஜா என்று மாற்றிக் கொண்ட இளையராஜா ஒரு கட்டத்தில் இசைஞானியாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு தற்போது வரை அதை மெயின்டெயின் செய்து வருபவர். இசைஞானமே தனக்கு கிடையாது என்றும் இசை குறித்த எந்தவிதமான புரிதலும் இல்லாமல் தான் திரைத்துறையில் தான் நுழைந்ததாகவும் இளையராஜா தெரிவித்துள்ளார். தன்னுடைய முதல் படமான அன்னக்கிளிக்கு இசையமைத்தது முதல் தற்போதுவரை தனக்கு மியூசிக் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.
எனக்கு மியூசிக் தெரியாது: இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவிற்கு மரியாதை செய்யும்வகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இளையராஜா, தன்னுடைய இசை அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது தான் இசையை கற்றுக் கொள்ளவே சென்னை வந்ததாகவும் தன்னுடைய அம்மா ரேடியோ பெட்டியை விற்றுத்தான் 400 ரூபாய் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.அதில்தான் தான் முதல் படமான அன்னக்கிளி படத்திற்கு இசையமைத்தது முதல் தற்போது வரை மியூசிக் தெரியாது என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன் கொடுத்த கமெண்ட்: தன்ராஜிடம் இசை கற்றுக் கொள்ள சேர்ந்ததாகவும் படிப்படியாக ஒவ்வொரு விஷயத்தையும் கடந்து அன்னக்கிளி படத்தின் வாய்ப்பை பெற்றதாகவும்அவர் தெரிவித்துள்ளார். அப்போதும் மியூசிக் தெரியாது என்று கூறியுள்ள இளையராஜா, டிராமா ஒன்றில் பணிபுரியும் வாய்ய்பு கிடைத்த நிலையில், அதற்கும் இசை தெரியாமல்தான் பாடல்களை போட்டதாகவும் கூறியுள்ளார். அந்த காலகட்டத்தில் தன்னை பார்த்து சிரித்தவர்கள் பிற்காலத்தில் தன்னிடம் வேலை செய்ததாகவும் அப்போதும் தனக்கு இசை தெரியாது என்றும் இளையராஜா தெரிவித்துள்ளார். இதையடுதது பேசிய, கமல்ஹாசன், ஆனால் மியூசிக்கிற்கு இளையராஜாவை தெரியும் என்று முத்தாய்ப்பாக முடித்துள்ளார்.
இளையராஜா இசை வீடியோ: இதனிடையே இன்றைய தினம் தான் தன்னுடைய பியானோவில் டியூன் போடும் வித்தையை வீடியோவாக வெளியிட்டுள்ளார் இளையராஜா. அவரது இசையில் வெளியான பருவமே பட பாடலின் வரிகளை அவருடைய இசை நோட்ஸாச அவர் அரங்கேற்ற, அதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். பூந்தோட்டத்தில் ஹோ காதல் கண்ணம்மா என அவர் பாட, இளையராஜாவின் இசைக்காக இந்த வரிகள் ஏற்படுத்தப்பட்டனவா அல்லது இந்த வரிகளுக்காக இளையராஜாவின் இசை உருவானதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. எந்த காலத்திலும் ரசிகர்களை விட்டு இந்த சந்தேகம் நீங்க போவதில்லை.


Click it and Unblock the Notifications











