“சின்ன மச்சான்.. செவத்த மச்சான்” ஹிட்.. தனுஷ், பிரபுதேவா, லாரன்சுக்கு நன்றி சொன்ன அம்ரீஷ்!
சார்லி சாப்ளின் 2 பாடல் ஹிட்டால் இசையமைப்பாளர் அம்ரீஷ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
சென்னை: தனது இசையில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான் பாடல் சூப்பர் ஹிட்டானதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் அம்ரீஷ்.
பிரபல நடிகை ஜெயச்சித்ராவின் மகன் அம்ரீஷ். இவர் தற்போது சார்லி சாப்ளின் 2 படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடல் சமீபத்தில் வெளியானது. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பட்டம் பெற்ற செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி இணைந்து பாடிய இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யூடியூபில் மட்டும் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் இப்பாடலைக் கண்டு களித்திருக்கிறார்கள்.
இதனால் அம்ரீஷ் மற்றும் சார்லி சாப்ளின் 2 படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் மற்றும் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ஆகியோர்.

தனுஷுக்கு நன்றி..
அப்போது பேசிய அம்ரீஷ், "இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா, இயக்குனர் ஷக்திசிதம்பரம், பிரபுதேவா ஆகியோருக்கும் இந்த பாடலை ட்விட் மூலம் மேலும் பாப்புலராக்கிய தனுஷுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

பிரபுதேவாவின் டான்ஸ்:
பிரபு தேவா எவ்வளவோ டியூனுக்கு விதவிதமான டான்ஸ் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். சின்ன மச்சான் பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.

சார்லி சாப்ளின் 2:
எனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மூலம் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மூலமாகவும், பிரபுதேவா மூலம் சார்லி சாப்ளின் 2 படத்தின் மூலமாகவும் எனக்கு கிடைத்திருக்கிறது எனும் போது பெருமையாக இருக்கிறது.

நம்பிக்கை:
மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே. அடுத்து சார்லி சாப்ளின் 2 படத்தில் இன்னும் 4 பாடல்கள் வெளியாக இருக்கிறது. அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்று நம்புறேன்.

முதலிடம்:
சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் எல்லா சோசியல் மீடியாவிலும் முதல் இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் இருக்கிறது என்பது எங்கள் குழுவினருக்கு கிடைத்த வெற்றி" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











