பூஞ்சக் கண்ணழகி… அழகான வீடியோ பாடலை வெளியிட்ட அனிருத்
சென்னை : இசையமைப்பாளர் அனிருத் சிறப்பான பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார்.
தற்போது பூஞ்சக் கண்ணழகி என்ற லிரிக் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் தொடர்ந்து சிறப்பான பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரது இசையமைப்பில் பல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிகமான படங்களுக்கு இசையமைத்து வருபவர்களில் முதலிடத்தில் உள்ளார் அனிருத்.

சமூக வலைதளங்களில் பிசி
சமூக வலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார் அனிருத். பல படங்களின் அப்டேட்கள், பாடல்கள் குறித்த அப்டேட்கள் என அவரது ட்விட்டர் பக்கங்கள் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகின்றன. தொடர்ந்து புதியவர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும் அனிருத் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

புதியவர்களுக்கு ஊக்கம்
அவ்வப்போது புதியவர்களின் வீடியோ, லிரிக் வீடியோ உள்ளிட்டவற்றை தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அவர்களை ஊக்குவித்து வருகிறார். பல பாடல்கள் இவர் அறிமுகம் செய்வதால் மட்டுமே பிரபலமடைந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் நிலைகளும் காணப்படுகின்றன.

பூஞ்சக் கண்ணழகி பாடல்
இந்நிலையில் தற்போது பூஞ்சக் கண்ணழகி என்ற லிரிக் வீடியோ பாடலை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிறப்பான மெலடி பாடலாக அமைந்துள்ள இந்தப் பாடலில் காதல் வழிந்தோடுகிறது. காதலாகி கசிந்துருகி காதலன் பாடும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.
காதலோடு வெளியீடு
இந்நிலையில் இந்தப் பாடலை காதலோடு வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று அனிருத் தெரிவித்துள்ளார். பைஜு சாம் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். மிகவும் அழகாக அமைந்துள்ளது பாடல். பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார் தமயந்தி. ஆர்கே ஆதித்யா மற்றும் ரேஷ்மா ஷ்யாம் ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











