AR Rahman: இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு புதுமை விருது.. அட இப்படியொரு சாதனைக்கு சொந்தக்காரரா?

சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் 30 ஆண்டுகளை கடந்து இந்திய அளவில் மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டிலும் படங்களில் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் உருவாகும் படங்கள் கண்டிப்பாக பாடல்களுக்கான வரவேற்பை பெற்றுவிடும். அந்த வகையில் சிறப்பான மற்றும் அதிரடியான இசைக்கு சொந்தக்காரராக காணப்படுகிறார் ஏஆர் ரஹ்மான்.

சமீபத்தில் தமிழில் இவரது இசையில் தனுஷின் ராயன் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகி இவர் இசையமைத்து வருகிறார். பாலிவுட்டிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வருகிறார். இந்த வயதிலும் பிசியான இசையமைப்பாளராக காணப்படுகிறார்.

ar rahman iit madras

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் 30 ஆண்டுகளைக் கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் அடுத்தடுத்த வெற்றிப்பட கூட்டணிகளில் இணைந்து சிறப்பான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கொடுத்து வருகிறார். இவை மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் இவர் அடுத்தடுத்த படங்களில் இணைந்து மாஸ் காட்டி வருகிறார். விருதுகளுக்கும் பஞ்சமில்லாமல் அடுத்தடுத்து விருதுகளை பெற்று வருகிறார். 7 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ள ஏஆர் ரஹ்மான், ஆஸ்கார் விருதையும் விட்டு வைக்கவில்லை.

ராயன் படம்: தொடர்ந்து படங்களில் இசையமைத்துவரும் ஏஆர் ரஹ்மான், தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படத்திற்கு சிறப்பான இசையை கொடுத்திருந்தார். அதிரடி சரவெடியாக இவரது பாடல்களும் பிஜிஎம்மும் அமைந்திருந்தன. இந்நிலையில் தற்போது இவரது virtual reality படமான லே மஸ்க் படத்திற்காக இவருக்கு ஐஐடி மெட்ராஸ் புதுமை விருதை அறிவித்துள்ளது. ஏஆர் ரஹ்மானின் இசைப்படமான லே மஸ்க் படத்தை அவரே எழுதி, இயக்கி இணைந்து தயாரிக்கவும் செய்திருந்தார்.

ஐஐடி மெட்ராசின் விருது: இந்நிலையில் இந்தப் படத்திற்காக ஐஐடி மெட்ராஸின் புதுமை விருதையும் ஏஆர் ரஹ்மான் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் இந்த விருதை அவர் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை, காட்சிக் கதைசொல்லல் ஆகியவற்றை கலந்து இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்ட நிலையில், Nora Arnezeder, Guy Burnet, Munirih Grace மற்றும் Marium Zohrabyan ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒலிப்பதிவை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏஆர் ரஹ்மான் வெளியிட்டிருந்தார்.

லே மஸ்க் படம்: இதன்போது பேசிய ஏஆர் ரஹ்மான், இசையே லே மஸ்க் படத்தின் இதயத்துடிப்பு தெரிவித்திருந்தார். படத்தின் ஆன்மாவை இசை எடுத்து செல்வதாகவும் உணர்வுபூர்வமான பயணத்தின்மூலம் பார்வையாளர்களை வழிநடத்துவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். மேலும் இந்த ஒலிப்பதிவை சர்வதேச அளவ்ல பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் தாங்கள் உருவாக்கிய உலகத்தை பற்றி ஒரு பார்வையை வழங்கியுள்ளதாகவும் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X