GV Prakash kumar: மீண்டும் இணையும் ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி.. மேஜிக் செய்ய தயாரான இசையமைப்பாளர்!
சென்னை: வெயில் படம் மூலம் தன்னுடைய கேரியரை சினிமாவில் துவங்கியவர் ஜிவி பிரகாஷ். ஏஆர் ரஹ்மானின் நெருங்கிய உறவினர் என்ற பின்னணி இருந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட இசையால் இசை அசுரன் என்ற பெயர் கிடைக்கும்வகையில் அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.
அடுத்ததாக அவரது இசையில் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த தீபாவளியையொட்டி இவரது இசையில் வெளியான அமரன், லக்கி பாஸ்கர் என இரு படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார்: இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கிய ஜிவி பிரகாஷ் தன்னுடைய முதல் படமான வெயில் படத்திலேயே தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார். அதுமுதல் நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடி வருகிறார். அதிகமான ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார். பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த தீபாவளியையொட்டி இவரது இசையில் அடுத்தடுத்து அமரன், லக்கி பாஸ்கர் படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்தன.
அடுத்தடுத்த ஹிட் படங்கள்: குறிப்பாக அமரன் படத்தின் பாடல்கள் ட்ரெண்டிங்கில் இருந்தன. அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக கிங்ஸ்டன் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார். இதனிடையே அடுத்ததாக இயக்குநர் செல்வராகவனுடன் இணையவுள்ளதாக ஜிவி பிரகாஷ் தற்போது அறிவித்துள்ளார். முன்னதாக இந்தக் கூட்டணி இணைந்து ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என Mesmerizingஆன படங்களை கொடுத்த நிலையில், இவர்களின் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் அறிவிப்பு நாளைய தினம் வெளியாகவுள்ளதாக ஜிவி பிரகாஷ் தற்போது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நடிகராகவும் மாஸ்: அடுத்தடுத்த படங்களில் நடிகராக இணைந்து வருகிறார் செல்வராகவன். இதனிடையே அவர் மீண்டும் இயக்குநராக இணையவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என அவர் எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துவந்த நிலையில், நாளைய தினம் அவரது அடுத்தப்படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்தப் படம் அதிகமான மேஜிக் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்குநராவது குறித்து ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.

விவாகரத்து முடிவு: சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான முடிவை எடுத்துள்ளார் ஜிவி பிரகாஷ். 11 ஆண்டுகளாக தொடர்ந்த தன்னுடைய திருமண வாழ்க்கையை அவர் நிறைவு செய்துள்ளார்.இவருக்கும் பாடகி சைந்தவிக்கும் இடையில் கடந்த 2013ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இதனிடையே இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி காலத்திலிருந்தே இவர்கள் இருவரும் காதலித்த நிலையில், இந்த அதிர்ச்சி முடிவை இருவரும் இணைந்து எடுத்துள்ளனர். ஆனாலும் இவர்களின் நட்பு தொடர்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் இணைந்து சைந்தவி பாடல் பாடியிருந்தார்.


Click it and Unblock the Notifications











