Ilayaraja: மகள் பவதாரணியின் ஆசையை நிறைவேற்ற களமிறங்கிய இசைஞானி.. மகளின் பிறந்தநாளில் உருக்கம்!
சென்னை: இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் முன்னணி இசையமைப்பாளராக மாஸ் காட்டி வருகிறார். இவரது இசைப்பயணம் மிகவும் அலாதியானது. பல ஆண்டுகளாக ஏராளமான ரசிகர்களின் வாழ்க்கையில் முதலிடத்தை இவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை இடம்பெற்றுள்ளன.
சமீபத்தில் இளையராஜா இசையில் வெளியான விடுதலை 2 படத்தின் பாடல்களும் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளன. தொடர்ந்து தன்னுடைய இசைப்பயணத்தை தொடர்ந்துவரும் இளையராஜா, சிம்பொனி உள்ளிட்ட முயற்சிகளிலும் பல ஆண்டுகளாக தன்னை இணைத்து வருகிறார்.

இசையமைப்பாளர் இளையராஜா: இசையமைப்பாளர் இளையராஜாவின் திரைப்பயணம் பல ஆண்டுகளை கடந்து வெற்றிப் பயணமாக தொடர்ந்து வருகிறது அன்னக்கிளி படத்தில் துவங்கிய இவரது பயணம் மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்து வருகிறது. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இளையராஜா பல தனி முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சிம்பொனி இசை, இசை நிகழ்ச்சிகள், பக்தி பாடல்கள் என இவரது அடுத்தடுத்த முயற்சிகள் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றன.
மறைந்த பவதாரணி: இளையராஜாவின் இசையில்லாமல் தங்களது வாழ்க்கையை கற்பனை செய்யக்கூட முடியாத பல ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்த லிஸ்ட்டில் 2K கிட்ஸ்சும் உள்ளனர். தற்காலத்திய இளம் தலைமுறையினரும் இந்த பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். இளையராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா மறைந்த மகள் பவதாரணியும் தங்களின் அப்பாவின் பாதையிலேயே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரியில் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த பவதாரணியும் மிகச்சிறந்த பாடகியாக மட்டுமில்லாமல் சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.
பவதாரணி நினைவேந்தல் நிகழ்ச்சி: தன்னுடைய ஒரே மகளின் மறைவு இளையராஜாவை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. இதை அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இசையமைப்பாளராக தான் அதிகமான நேரத்தை செலவழித்ததால் தன்னுடைய மகன்கள் மற்றும் மகளை சரியாக கவனிக்க முடியவில்லை என்று தன்னுடைய வருத்ததை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய மகளின் நினைவுநாளில் அவர் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். பவதாரணி பாடிய பல பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் ராஜா அழுததையும் அவரை இளையராஜா தேற்றியதையும் பார்க்க முடிந்தது.
பவதாரணியின் கடைசி விருப்பம்: இதனிடையே, தன்னுடைய மகளின் ஆசையை தான் நிறைவேற்ற உள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார். பெண்கள் மட்டுமே அடங்கிய இசைக்குழுவை உருவாக்க பவதாரணி முயற்சித்ததாகவும் ஆனால் அவரது ஆசை நிறைவேறாமல் போனதாகவும் தெரிவித்துள்ள இளையராஜா, அவர் ஆசைப்பட்டது போல 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மட்டுமே அடங்கிய இசைக்குழுவை தான் உருவாக்கவுள்ளதாகவும் உலகம் முழுவதிலும் இருந்து இதற்கான ஆட்களை தான் தேர்வு செய்யவுள்ளதாகவும் இளையராஜா மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











