ட்ரெண்டிங்கில் சாய் அபயங்கரின் அடுத்த வீடியோ பாடல்.. க்யூட்டாக வலம்வரும் மீனாட்சி சௌத்ரி!

சென்னை: பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகனான சாய் அபயங்கர் வீடியோ பாடல்களை வெளியிட்டு மிகப்பெரிய அளவில் ரீச்சை பெற்றுள்ளார். முன்னதாக கட்சி சேர, ஆசை கூட பாடல்களை வெளியிட்ட சாய் அபயங்கருக்கு இதன் மூலம் சூர்யா 45, பென்ஸ் உள்ளிட்ட படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் சித்திர புத்திரி என்ற மூன்றாவது வீடியோ பாடலை தற்போது வெளியிட்டுள்ளார் சாய் அபயங்கர். இந்த பாடலில் அவருடன் சேர்ந்து கோட் பட நாயகி மீனாட்சி சௌத்ரி ஆட்டம் போட்டு உள்ளார். புதையலை தேடி போகும் இளைஞனுக்கு புதையலாக கிடைக்கும் நாயகியை மையமாக கொண்டு இந்த வீடியோ பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

sai abhiyankar sithira puthiri song meenakshi chaudhari

இசையமைப்பாளர் சாய் அபயங்கர்: இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மிகப்பெரிய கவனத்தை தமிழில் பெற்று வருகிறார். பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகனான சாய் அபயங்கர் முன்னதாக கட்சி சேர மற்றும் ஆசை கூட பாடல்கள் மூலம் மிகப்பெரிய அளவில் ரீச்சை பெற்றவர். இந்த பாடல்கள் இவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பையும் ஏராளமான வியூஸ்களையும் பெற்றுக் கொடுத்தது. வீடியோ பாடலாக வெளியான இந்த பாடல்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பை மட்டுமில்லாமல் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

அடுத்தடுத்த படங்கள்: சூர்யா -ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகி வரும் சூர்யா 45 மற்றும் ராகவா லாரன்சின் பென்ஸ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர். இதில் சூர்யா 45 படத்திற்கு முன்னதாக ஏஆர் ரஹ்மான் இசையமைக்க கமிட்டாகி இருந்தார். இந்நிலையில் அடுத்ததாக சத்திர புத்திரி பாடலை இசையமைத்து வீடியோவாக கொடுத்துள்ளார் சாய் அபயங்கர். எங்க முந்தைய பாடல்களை போலவே இந்த பாடலும் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்து வருகிறது. கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பாடல் ஒரு நாளிலேயே ஏறக்குறைய மூன்று மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.

சாய் அபயங்கரின் அடுத்த பாடல்: இந்த பாடலில் சாய் அபயங்கருடன் இணைந்து கோட் பட நாயகி மீனாட்சி சௌத்ரியும் நடித்துள்ளார். இந்த பாடலின் ப்ரோமோவையும் சிறப்பாக வெளியிட்டு இருந்தார் இவர். ஒரு மன்னர் ஒளித்து வைத்த புதையலை தேடி ஏராளமானோர் செல்லும் நிலையில் சாய் அபயங்கரும் அதை தேடி செல்வதாகவும் அங்கு மீனாட்சி சௌத்ரியை பார்ப்பதாகவும் இந்த வீடியோ பாடல் அமைந்துள்ளது. பாடலில் மீனாட்சி சவுத்ரியை பார்த்து பரவசப்படும் சாய் அபயங்கர் ஆட்டம் போடுவதாக காணப்படுகிறது. இளவட்டங்களை கவரும் வகையில் இந்த பாடலின் வரிகள் கவனத்துடன் எழுதப்பட்டுள்ளன. பாடலாசிரியர் விவேக் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

ட்ரெண்டிங்கில் சத்திர புத்திரி பாடல்: தொடர்ந்து முந்தைய பாடல்களைப் போலவே இந்த பாடலும் சாய் அபயங்கருக்கு மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது இந்தப் பாடல் யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. கடந்த ஆண்டில் சாய் அபயங்கரின் கட்சி சேர பாடல் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இசையமைத்துவரும் சாய் அபயங்கர் தன்னுடைய 20வது வயதிலேயே அனைத்து தரப்பினரையும் தன்னுடைய இசையால் கவர்ந்து வருகிறார். இதேபோல இவரது இசையில் சூர்யா 45 மற்றும் பென்ஸ் படங்கள் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X