நான் இசையமைப்பாளராகறதுக்கு ஏஆர் ரஹ்மான்தான் காரணம்.. வெளிப்படையாக பேசிய யுவன் சங்கர் ராஜா!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசை மேஸ்ட்ரோ இளையராஜாவின் மகனாகவே படங்களில் அறிமுகமானார். இருந்த போதிலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் யுவன் சங்கர் ராஜாவின் அப்பா இளையராஜா என்று கூறும் அளவிற்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா கை வண்ணத்தில் பல படங்களின் மனதை வருடும் பாடல்கள் அமைந்துள்ளன. இவை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் எப்போதுமே இடம் பெற்று வருகின்றன. ஆயினும் பிஜிஎம் நாயகனாகவே யுவன் சங்கர் ராஜா கொண்டாடப்படுகிறார். முன்னணி நடிகர்களுக்கு இவர் அமைத்த பல பிஜிஎம்கள் எப்போதும் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகின்றன.

vijay goat movie yuvan shankar raja

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் தான் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். மிகச் சிறப்பான அதிகமான படங்களை தன்னுடைய இசையில் கொடுத்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையின் சமீபத்தில் விஜயின் கோட் படம் வெளியானது. இந்த படத்தில் தன்னுடைய மறைந்த தங்கை பவதாரணியின் வாய்ஸை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலில் பயன்படுத்தியிருந்தார் யுவன். இதே போல முதல்முறையாக கோட் படத்தில் நடிகர் விஜய்யை இரண்டு பாடல்களுக்கு பாட வைத்து அழகு பார்த்தார்.

கோட் படம்: கோட் படத்தின் பாடல்கள் மற்றும் இசை கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் படத்தின் மட்ட பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இதே போல விசில் போடு பாடலும் படத்தின் ரிலீசை தொடர்ந்தது ரசிகர்களை கவர்ந்தது. சின்ன சின்ன கண்கள் பாடல் ரசிகர்களுக்கு தாலாட்டு பாடியது. இதுபோல படத்தின் பாடல்கள் படத்தின் ரிலீசை தொடர்ந்தே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில் தன்னுடைய தங்க பவதாரணியின் மறைவால் மிகவும் உடைந்ததாகவும் அதனால்தான் கோட் படத்தில் பாடல்கள் அவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்ததாகவும் முன்னதாக படத்தின் ப்ரோமோஷனின் போது படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருந்தது கவனத்திற்கு உள்ளானது.

யுவனின் பைலட் ஆசை: அடுத்தடுத்த படங்களில் பிசியாக செயல்பட்டு வரும் யுவன் சங்கர் ராஜா, தற்போது கொடுத்துள்ள பேட்டியொன்றில் தான் முன்னதாக பைலட் ஆகவே ஆசைப்பட்டதாகவும் ஆனால் பள்ளியில் தன்னுடைய சக நண்பர்கள் என்னிடம் பேசும்போது இளையராஜாவின் காலம் முடிந்து விட்டதாகவும் அடுத்ததாக ஏஆர் ரஹ்மான் என்று ஒரு புதிய இசையமைப்பாளர் வந்துள்ளதாகவும் பேசியதாகவும் இது தன்னை மிகவும் பாதித்ததால் தான் இசையமைப்பாளராக அறிமுகமானதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் பைலட் ஆகும் தன்னுடைய கனவு தற்போது இசையமைப்பாளராக மாறியதற்கு ஏஆர் ரகுமான் தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.


பிஜிஎம் நாயகன்: யுவன் சங்கர் ராஜா எப்போதுமே பிஜிஎம் நாயகன் என்ற பெயரை பெற்றுள்ளார். மனதை வருடும் பாடல்கள் இவரது கைவண்ணத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்து வருகின்றன. பட வெற்றிப்பட பாடல்களுக்கு சொந்தக்காரராக உள்ளார் யுவன் சங்கர் ராஜா. இருந்தபோதிலும் படங்களில் இவர் கொடுக்கும் பிஜிஎம்மிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது. அதை பல படங்களில் இவர் சிறப்பாக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X