Singer Sid Sriram: சித் ஸ்ரீராம் பாடல்களை இனி எப்பதான் கேட்கலாம்?

சென்னை: பாடகர் சித் ஸ்ரீராம் ரசிகர்களுக்கான செய்தி இது. இப்போதைக்கு இவர் எந்த இசை அமைப்பாளர்கள் இசையிலும் திரை இசைப் பாடல்கள் பாடக்கூடாது என்று தடை விதித்து உள்ளதாம் இசை அமைப்பாளர்கள் சங்கம்.

2013ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்,ஏ.ஆர்,ரஹ்மான் இசையில் கடல் படத்தின் மூலம் திரைக்கு பின்னணிப் பாடகராக அறிமுகம் ஆனவர் சித் ஸ்ரீராம். மனதை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான இவர் வசிப்பது அமெரிக்காவில்.

சென்னையில் பிறந்த இவர் ஒரு வயதாக இருக்கும் போது குடும்பமாக அமெரிக்கா சென்றவர்கள்.. அதன் பின்னர் வளர்ந்தது, படித்தது எல்லாமே அமெரிக்காவில்தான். அம்மா ஸ்ரீலதா கர்நாடக சங்கீத இசை ஆசிரியர்.

 சித் ஸ்ரீராம் சங்கீதம்

சித் ஸ்ரீராம் சங்கீதம்

தனது அம்மாவிடம் இசை பயின்ற ஸ்ரீராம், அமெரிக்காவில் இசை குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் தமிழகத்துக்கும் வந்து அவ்வப்போது தனது வசீகர குரலால் இசை அமைப்பாளர்களை அழைத்தால் வந்து பாடிவிட்டு போகிறார். அதோடு, கர்நாடக சங்கீத கச்சேரிகளிலும் பாடி வருகிறார்.

 இவரை பிடிப்பதற்குள்

இவரை பிடிப்பதற்குள்

அமெரிக்காவில் இருக்கும் சித் ஸ்ரீராமை போனில் பிடிப்பது கூட ரொம்ப கஷ்டமாம். எப்போதும் ஸ்விட்ச் ஆப்னுதான் வருமாம். சரி தினமும் இப்படி இருக்குதேன்னு மெசேஜ் போட்டு வச்சா,ஒரு மாசம் கழிச்சு மெசேஜ் பார்த்தேன்னு போன் பண்ணுவாராம். சரி டிராக் அனுப்பி வைங்கன்னு சொல்லி, டிராக் அனுப்பி வச்சா அது பிடிச்சால்தான் ஓகே சொல்வாராம். இல்லேன்னா வேற அனுப்புங்கன்னு சொல்வாராம். இப்படிப்பட்ட டிமாண்ட் உள்ள ஆள் சித் ஸ்ரீராம்.

 ரொம்ப யுனிக்

ரொம்ப யுனிக்

சித் ஸ்ரீராமுக்கு ரொம்ப யுனிக் குரல் என்றும், மயங்காதவர்கள் இல்லை என்றும், ரசிக்க ஆரம்பித்தவர்கள்தான் இவரின் ரசிகர்கள். எல்லாம் சரி, அதெல்லாம் இருக்கட்டும்...எதனால் இவர் இனி பாட மாட்டார் என்று பார்த்தால், 2013 ம் ஆண்டில் இருந்து இசை அமைப்பாளர்கள் சங்கத்தின் மெம்பர்ஷிப் ஆக சொல்லி வற்புறுத்தியும், ஸ்ரீராம் கண்டுக்கவே இல்லை.

 வந்து வந்து

வந்து வந்து

மெம்பர் ஷிப் ஆவதை தள்ளி தள்ளி போட்டுக்கொண்டு, ஆனால் இந்தியா வந்து வந்து பாடிக்கொண்டே இருக்காராம். இதை கண்டிக்க நினைச்ச இசை அமைப்பாளர் சங்கத்தின் தலைவர் இசை அமைப்பாளர் தீனா, இசை அமைப்பாளர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்காராம். மெம்பர் ஷிப் ஆகும்வரை அவரை பாட வைக்க கூடாது என்று.

இப்போது தீனாவுக்கு ஸ்ரீராம் போன் பண்ணிக்கொண்டே இருக்காராம். ஆனால், அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறதாம்!

More from Filmibeat

Read more about: singer பாடகர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X