தம்பிக்கு சோனியா அகர்வால் வைத்துக் கொடுத்த மியூசிக் கேரேஜின் 1வது ஆண்டு நிறைவு விழா
சென்னை: நடிகை சோனியா அகர்வால் தனது தம்பி சௌரப் அகர்வாலுக்கு வைத்துக் கொடுத்த இசை பள்ளியான மியூசிக் கேரேஜின் முதலாமாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
இயக்குனர் செல்வராகவனை பிரிந்த பிறகு சோனியா அகர்வால் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். படங்களில் வாய்ப்பே கிடைக்காவிட்டாலும் சரி ஒரு பாடலுக்கு மட்டும் ஆடக்கூடாது என்ற கொள்கையோடு இருக்கிறார். அவருக்கு தனது தம்பி சௌரப் என்றால் கொள்ளைப் பிரியம். இதையடுத்து அந்த பாசமலர் தனது தம்பியை வாழ்க்கையில் செட்டிலாக்க முடிவு செய்தது.
சென்னையில் தம்பிக்கு ஒரு இசை நிலையத்தை வைத்துக் கொடுக்க முடிவு செய்தார் சோனியா.

ஹாரிஸ் ஜெயராஜ் திறந்து வைத்த மியூசிக் கேரேஜ்
சோனியா அகர்வால் தனது தம்பி சௌரப் அகர்வாலுக்கு சென்னையில் இசை பயிற்சி பள்ளியான மியூசிக் கேரேஜை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வைத்துக் கொடுத்தார். இந்த இசை நிலையத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் திறந்து வைத்தார்.

துவக்க விழாவில் ஆர்யா, சோனா, நமீதா
நிகழ்ச்சியில் கவர்ச்சி நடிகை சோனா, நடிகர் ஆர்யா, நடிகர் அப்பாஸின் மனைவி, நமீதா, பேஷன் டிசைனர் சிட்னி சிலேடன், டிவி நடிகை ரம்யா, டாக்டர் பிரியா செல்வராஜ், ரியாஸ் கான் என பெரும் பட்டாளமே கலந்து கொண்டது.

முதலாம் ஆண்டு நிறைவு விழா
வாத்தியக் கருவிகளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி நிலையமாக விளங்கும் மியூசிக் கேரேஜின் முதலாம் ஆண்டு நிறைவு விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் பின்னணி பாடகி சின்மயி, நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

அந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

அந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

அந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

அந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்



Click it and Unblock the Notifications











