நான் பாடிய முதல் பாடல் மெல்லிசையே .. எனது பெயர் இடம் பெறவில்லை.. பாடகர் ஸ்ரீநிவாஸ் உருக்கம்!
சென்னை : பாடகர் ஸ்ரீனிவாஸ் பிரபலமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தான் பாடிய முதல் பாடலான மிஸ்டர் ரோமியோ படத்தில் வரும் மெல்லிசையே பாடலில் தனது பெயர் இடம்பெறவில்லை என்ற உருக்கமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்களை தனது இனிமையான குரலால் கட்டி இழுத்து வரும் பாடகர் ஸ்ரீநிவாஸ் தமிழில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா தொகுத்து வழங்கிய மிகப்பிரபலமான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தான் பாடிய முதல் பாடலில், பாடகராக தனது பெயர் இடம்பெறவில்லை என்ற உருக்கமான தகவலை பகிர்ந்துள்ளது அனைவரையும் உருக வைத்துள்ளது.

மெல்லிசையே
பாடகர் ஸ்ரீனிவாஸ் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இணைந்து பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை இன்று வரை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இவர்களது கூட்டணியில் உருவான மிஸ்டர் ரோமியோ படத்தில் வரும் மெல்லிசையே பாடல் அவ்வளவு எளிதில் ரசிகர்களால் மறக்க முடியாது. சிறந்த இசை, மயக்க வைக்கும் பாடல் வரிகள், கண்கவரும் ஒளிப்பதிவு மேலும் கலர்கலராக மாறும் காஸ்ட்யூம் நிறம் என அனைவரையும் பிரமிக்க வைத்து பல்வேறு சிறப்பம்சங்களை இந்த மெல்லிசையே பாடல் கொண்டுள்ளது.

சூர்யா தொகுத்து வழங்கிய
இந்நிலையில் ஸ்ரீநிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, நடிகர் சூர்யா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் இதுவரை யாரும் அறியாத தகவல் ஒன்றை பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சினிமாவில் பாடகராவதற்கு முன் வாய்ப்புகளை தேடி அலைந்த ஸ்ரீனிவாஸுக்கு, ஏ ஆர் ரஹ்மான் மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தின் மூலம் முதல் வாய்ப்பை கொடுத்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து
பிரபுதேவா, சில்பா ஷெட்டி, மதுபாலா என பிரபலமான நடிகர்-நடிகைகள் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில், இதில் இன்று வரை மயக்க வைக்கும் மெலோடி பாடலாக மெல்லிசையே பாடல் இருந்து வருகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்க, ஸ்ரீநிவாஸ், உன்னி மேனன், ஸ்வர்ணலதா மற்றும் சுஜாதா ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடி இருந்தனர்.

பெயர் இடம்பெறவில்லை
பல வாய்ப்புகளை தேடி கடைசியாக ஏ ஆர் ரஹ்மான் இசையில் மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தில் மெல்லிசையே பாடலை பாடிய சந்தோசத்தில் அந்த படத்தின் பாடல் கேசட்டை காத்திருந்து முதல் ஆளாக போய் முதல் பதிப்பை வாங்கி பார்த்த பாடகர் ஸ்ரீனிவாஸ்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் முறையாக பாடிய பாடலில் பாடகராக தனது பெயர் இடம்பெறும் என நினைத்திருந்த ஸ்ரீனிவாஸுக்கு ஏமாற்றம் தரும் வகையில் அதில் பாடகராக அவரது பெயர் இடம்பெறவில்லை.

ரோஜா படத்தில் எனது பெயர் இல்லை
இந்நிலையில் ஒரு நாள் ஏ ஆர் ரஹ்மானை சந்தித்த போது மெல்லிசையே பாடலில் பாடகராக தனது பெயர் இடம்பெறவில்லை ரொம்ப கஷ்டமா இருக்கு சார் என மனம் வருந்தி ஸ்ரீனிவாஸ் கூற, டோன்ட் ஒரி ஸ்ரீனிவாஸ் ரோஜா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் எடிஷனில் இசையமைப்பாளராக எனது பெயர் இல்லை, என்ற மற்றுமொரு அதிர்ச்சி தகவலை கூலாக ஏ ஆர் ரஹ்மான் சொல்லியிருக்கிறார். மேலும் ஸ்ரீனிவாஸுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக கவலைப்படாதீங்க கண்டிப்பா ஏதாவது ஒன்று வரும் என ஏ ஆர் ரஹ்மான் தனது பாணியில் கூலாக ஸ்ரீனிவாஸுக்கு ஆறுதல் கூறினார். இவ்வாறு நாம் அனைவரும் ரசித்து பார்த்தும் கேட்டும் வந்த மெல்லிசையே பாடலுக்கு பின்னால் நடந்த யாரும் அறியாத உருக்கமான தகவல் ஒன்றை, பாடகர் ஸ்ரீனிவாஸ் அந்த நிகழ்ச்சியின் மூலம் கூறியிருந்தது அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











