மகதீரா ராஜமவுலி இயக்கத்தில் 'நான் ஈ'!

By Shankar

Naan Ee Audio Lunch
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் புதிய படம் 'நான் ஈ'. பி.வி.பி. சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தில் நானி, சமந்தா, சந்தானம் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸ் வளாகத்தில் நடந்தது.

நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டனர். விழாவில் சூர்யா பேசுகையில், "தெலுங்கில் மகதீரா போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி தமிழில் நான் ஈ, படத்தை எடுக்கிறார். ஹாலிவுட்டில் நிறைய தொழில் நுட்பதுறைகள் உண்டு. நம்மிடம் அவ்வளவு வசதிகள் இல்லை. ஆனாலும் இருக்கும் வசதிகளை வைத்து அவர் எடுத்த படங்கள் பிரமிக்க வைத்துள்ளன.

தற்போது ஈ -யை அனிமேஷனில் உருவாக்கி இந்த படத்தை எடுத்துள்ளார். இது அடுத்த தலைமுறைக்கான படமாக இருக்கும். கிராபிக்ஸ் படங்கள் எடுப்பது சவாலான விஷயம். தெலுங்கு, மலையாள திரையுலகில் தமிழ் நடிகர்களுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் மரியாதையும், வரவேற்பும் உள்ளது.

தமிழ் படங்களையும் ரசித்து பார்க்கிறார்கள். இயக்குனர் ராஜமவுலி தொடர்ந்து தமிழ் படங்கள் எடுக்க வேண்டும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X