பல முகத்தில் புன்னகை பிரமாதமாக நடந்தது நான் சிரித்தால் படத்தின் இசை வெளியீட்டு விழா
Recommended Video
சென்னை: கோலகலமாக நடந்தது நான் சிரித்தால் படத்தின் இசை வெளியீட்டு விழா.
அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர். சி தயாரித்து இருக்கும் படம் நான் சிரித்தால். இதில் ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே. எஸ். ரவிக்குமார், சாரா, படவா கோபி, கதிர், "எரும சாணி" விஜய் போன்ற பலர் நடித்து இப்படம் வரும் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
சுந்தர். சி ஆதியை வைத்து தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம்.
இதற்கு முன் மீசைய முறுக்கு மற்றும் நட்பே துணை ஆகிய படங்கள் இவரை வைத்து தயாரித்து உள்ளார்.
"கெக்க பெக்க" என்ற குறும்படத்தையே இவர்கள் சற்று மெருகேற்றி தற்போது திரைப்படமாக எடுத்து உள்ளனர். இப்படத்தை ராணா இயக்கி உள்ளார்.

நேற்று நடந்த விழாவில் குஷ்பு பேசியதாவது
இப்படம் மூலம் நாங்கள் ஹாட்ரிக் வெற்றியை பெற காத்து இருக்கிறோம். ஆதியை பார்க்கையில் எனது கணவர் சுந்தர். சியை பார்ப்பது போல இருந்தது. இவர்கள் இருவருடைய உழைப்பை பார்க்கும் பொழுது நானும் ஆதியின் மனைவியும் பிரம்மிப்பு அடைந்துள்ளோம் என்று கூறினார்.
இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில்
படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் நான் அச்சமயம் ஆதியை தேடுவேன். ஓரமாக சென்று பார்த்தால் தன் பாடலுக்கு இசை அமைத்து கொண்டு இருப்பார் ஆதி.
அவர் பல வேலைகளை செய்து கொண்டு எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்.
"ஹிப் ஹாப் தமிழா" ஆதி பேசுகையில்
இப்படம் முழுவதும் நான் சிரித்து இருக்கின்றேன். படத்தில் என் கதாபாத்திரம் பெயர் காந்தி. சிரிக்க கூடாத நேரத்தில் எல்லாம் நான் சிரிப்பேன். இது எனக்கு ஒரு மிகச் சிறந்த திரைப்படமாக அமைந்தது என தெரிவித்தார். என் மூன்று திரைப்படங்களிலும் மூன்று இயக்குனர்கள் உடன் பணியாற்றி உள்ளேன்.

ஆரம்பத்தில் நான் ராப் பாடல்கள் பாடி வந்தேன் சுந்தர் .சி ஆம்பள திரைப்படத்திற்கு வாய்ப்பு கொடுத்தார். பின் அவரிடம் ஒரு படத்தை தயாரித்து கொடுங்கள் என்று கூறினேன். அச்சமயம் தான் எனது திரைப்பட வாழ்க்கை துவங்கியது என பேசினார் ஆதி.
இயக்குனர் சுந்தர் .சி பேசுகையில்
இப்படம் என் தயாரிப்பில் ஆதி நடிக்கும் மூன்றாவது திரைப்படம். ஆதிக்கும் எனக்கும் பல வித்தியாசங்கள் இருந்தாலும் அவரை என் சகோதரனாகவே கருதுகிறேன்.
என்ன தான் ஆதி நட்பை மையப்படுத்தி மற்றும் விளையாட்டை மையப்படுத்தி நடித்து இருந்தாலும், ஆதியிடம் உள்ள நடிப்பை வெளிபடுத்த கிடைத்த ஒரு நல்ல திரைப்படம் நான் சிரித்தால்.
எனக்கும் ஆதிக்கும் சண்டை என்று எல்லாம் செய்திகள் உலா வருகிறது அது எல்லாம் உண்மை அல்ல நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம்.

இயக்குனர் ராணா பேசுகையில்
நான் இந்த மேடையில் மூன்று நபர்களுக்கு நன்றி கூற வேண்டும்.
முதலில் என் அம்மா மற்றும் அப்பா அடுத்து இயக்குனர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கும் நன்றி என தெரிவித்தார் ராணா. மேலும் அவர் கூறியதாவது என் குறும்படத்தை பார்த்து தலைவர் ரஜினி பாராட்டினர். ஷங்கர் செய்யும் பணியில் பாதியை நான் செய்தால் போதும் எனக்கு வெற்றி தான்.
நாம் தினமும் சோகம், துக்கம், தோல்வி மற்றும் கவலைகள் சந்திக்கின்றோம் இதனை எல்லாம் ஓரங்கட்டி விட்டு சிரித்தால் எப்படி இருக்கும் அது தான் இந்த கதை என கூறினார் இயக்குனர் ராணா.


Click it and Unblock the Notifications











