நாக சைத்தன்யா படத்தின் வீடியோ பாடல்... ரொமான்சில் பின்னி பெடலெடுக்கும் ஹீரோ!
ஐதராபாத் : நடிகர் நாக சைத்தன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியாகவுள்ள படம் அய் பில்லா.
இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இந்தப் பாடல் மிகவும் சிறப்பாக திரையாக்கப்பட்டுள்ளது.

நாக சைத்தன்யா -சமந்தா விவாகரத்து
நடிகர் நாக சைத்தன்யா -சமந்தா விவாகரத்து அறிவிப்பு தற்போது டாக் ஆஃப் த டவுனாக உள்ளது. இதுகுறித்த பல்வேறு விவாதங்கள், வதந்திகள் உலவி வருகின்றன. இதுகுறித்து சமீபத்தில் சமந்தா தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். நாக சைத்தன்யாவும் சமந்தா குறித்த கேள்விகளை தவிர்த்து வருகிறார்.

பல்வேறு வதந்திகள்
தங்களுடைய விவாகரத்து முடிவு நீண்ட ஆலோசனைக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து மீள தங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் இருவரும் கூட்டாக கேட்டுக் கொண்டனர். ஆயினும் அவர்கள் இருவர் குறித்தும் தினந்தோறும் பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

அய் பில்லா படம்
இந்நிலையில் நாக சைத்தன்யாவின் அடுத்த படம் அய் பில்லா தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சாய் பல்லவி இந்தப் படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். துடிப்பான இளைஞராக, ஜூம்பா நடன பயிற்சியாளராக இந்தப் படத்தில் நாக சைத்தன்யா நடித்துள்ளார்.
வீடியோ பாடல் வெளியீடு
இந்நிலையில் இந்தப் படத்தின் வீடியோ பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி இடம்பெற்றுள்ள இந்தப் பாடலில் ரொமான்ஸ் தூக்கலாக காணப்படுகிறது. இருவருக்கும் உள்ள புரிதல் மற்றும் கெமிஸ்ட்ரி பாடலில் தூக்கலாக காணப்படுகிறது.

மெலடி பாடல்
இந்தப் பாடலை ஹரிசரண் பாடியுள்ளார். படத்தின் இசையமைப்பை பவன் செய்துள்ள நிலையில், இந்தப் பாடல் மெலடி பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. இருவரின் இடையிலான காதலை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது. விவாகரத்து உள்ளிட்ட விஷயங்களில் தற்போது நாக சைத்தன்யா அதிகமாக பேசப்பட்டு வரும்நிலையில், இந்தப் படம் அந்த விளம்பரத்திலேயே சிறப்பான வரவேற்பை ரசிசகர்களிடையே பெற்றுள்ளது.

சேகர் கம்முலா இயக்கம்
மேலும் தெலுங்கின் முக்கியமான இயக்குநரான சேகர் கம்முலா இந்தப் படத்தை இயக்கியுள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. இந்தப் பாடல் மற்றும் ட்ரெயிலர் உள்ளிட்டவை படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











