ஜெயில் படத்தின் "நகரோடி" வீடியோ பாடல் வெளியானது!
சென்னை: இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இப்பொழுது ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் ஜெயில்.
ஜிவி பிரகாஷ்குமார் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வடசென்னை பையனாக நடித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ஜெயில் படத்திலிருந்து நகரோடி வீடியோ பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க வட சென்னையை பற்றி
பல தரமான திரைப்படங்களை இயக்கி பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். முழுக்க முழுக்க வட சென்னையை பற்றி உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணதி நடித்துள்ளார்.

மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் தனி முத்திரையைப் பதித்த ஜிவி பிரகாஷ்குமார் இப்பொழுது நடிகராகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார்.
ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி விதவிதமான கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்துவரும் ஜிவி பிரகாஷ்குமார் ஜெயில் படத்தில் இதுவரை நடித்திராத அளவிற்கு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரச்சனைகளால் வெளியிட முடியாமல் இருந்தது
2019ஆம் ஆண்டே ஜெயில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருந்தது. ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வெளியிட முடியாமல் இருந்தது.

தெருக்குரல் அறிவு
இந்த நிலையில் அனைத்து பிரச்சினைகளும் ஒரு வழியாக முடிவுக்கு வந்து இப்பொழுது ஜெயில் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் அசர வைத்தது. ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை அபர்ணதி இந்த படத்தில் நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.கிரைகீஸ் சினி கிரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நகரோடி வீடியோ பாடல்
இந்த நிலையில் ஜெயில் படத்திலிருந்து நகரோடி வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை பாடகர் தெருக்குரல் அறிவு எழுதியுள்ளார். அறிவு மற்றும் அனன்யா பட் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். ஜெயில் படத்தின் "நகரோடி" வீடியோ பாடல் அதிகாரபூர்வமாக தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











