'ஐயோ...அந்த பயங்கரம் இருக்கே..!' ஆஸ்திரேலிய டூரை பாதியில் முடித்த 'காந்த கண்ணழகி...' பாடகி!
மும்பை: கொரோனா பயத்தால் ஆஸ்திரேலிய பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு வந்ததாக பிரபல பாடகி தெரிவித்துள்ளர்.
பிரபல பின்னணி பாடகி, நீத்தி மோகன். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் உட்பட முன்னணி இசை அமைப்பாளர்கள் இசையில், பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

காந்த கண்ணழகி
தமிழில், ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்த ஐ படத்தில் வெளியான, 'மெர்சலாயிட்டேன்..', விக்னேஷ் சிவன் இயக்கிய, 'நானும் ரவுடிதான்' படத்தில் இடம்பெற்ற, 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே ..', விஜய்யின் தெறி படத்தில் வரும், செல்லக்குட்டி, பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த, 'நம்ம வீட்டுப்பிள்ளை' படத்தில் காந்த கண்ணழகி உட்பட பல ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் இவர்.

ஆஸ்திரேலியா
இவர், சமீபத்தில் தனது கணவர் நிஹர் பாண்ட்யா, சகோதரிகள் முக்தி, சக்தி மோகன் ஆகியோருடன் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுலா சென்றிருந்தார். அப்போதுதான், பிரபல ஹாலிவுட் நடிகர்கள் டாம் ஹாங்ஸ், அவர் மனைவி ரிடா வில்சன் ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது, இவர்களுக்குத் தெரிய வந்தது.

எச்சரிக்கை மணி
இதைக் கேள்விபட்டதும் பயம் அதிகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார் நீத்தி மோகன். 'இது தொற்று நோயின் ஆரம்பம்தான். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் எச்சரிக்கை மணி அடித்தது. டாம் ஹாங்ஸ், அவர் மனைவி ரிடா பாதிக்கப்பட்டது தெரிந்ததும் நாமும் பாதிக்கப்படாலம் என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது.

விமான நிலையம்
என் அம்மாவும் அப்பாவும் உடனடியாகத் திரும்பிவிடும்படி கூறினார்கள். நாங்கள் மார்ச் 17 ஆம் தேதி திரும்புவதற்கானத் திட்டத்தில் இருந்தோம். ஆனால், 12 ஆம் தேதியே திரும்பி விட்டோம். அந்த அனுபவம் பயங்கரமாக இருந்தது. நாங்கள் விமான நிலையம் வந்தபோது, வெறிச்சோடி கிடந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லை. நாங்கள் தரையிறங்கியபோது குறைவான ஆட்களே காணப்பட்டார்கள்.
Recommended Video

பண்ணை வீடு
குடிவரவு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டோம். சரியான செக்கப்புக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பினோம். இப்போது நினைத்தாலும் அது பயங்கரமாக இருக்கிறது ' என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். புனேவில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட அவர்கள், 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக அங்கேயே இப்போதும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications