மறுபடியும் மாட்டிக்கினாரா அனிருத்?.. கூலி பட பாடலும் அட்டுக்காப்பியா?.. போட்டு பொளக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: லியோ படத்தின் Ordinary Person பாடல் காப்பியடிக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பிய நிலையில், தற்போது கூலி படத்தின் 'விசிலு பறக்கட்டுமே' பாடலும் ஹாலிவுட் ஆல்பத்தின் காப்பி தான் என நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் பதிவிட்டு வருகின்றனர். மறுபடியும் காப்பி சர்ச்சையில் அனிருத் சிக்கிக் கொண்டாரா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, செளபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Netizens claims Anirudh Copycat Industry Baby song for Coolie movie song

சமீபத்தில் நாகார்ஜுனா, செளபின் சாஹிர், சத்யராஜ், உபேந்திரா மற்றும் ரஜினிகாந்தின் பேக் ஷாட் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. கூலி திரைப்படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் உள்ளன என வெளியான அந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் இடம்பெற்ற பாடல் காப்பி பாடல் என சில நெட்டிசன்கள் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர்.

தமிழ் சினிமாவும் காப்பி சர்ச்சையும்: ஏ.ஆர். முருகதாஸ் காப்பி அடிப்பதாக கிளம்பிய சர்ச்சைகள் காரணமாக சில ஆண்டுகள் அவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் போனது. மீண்டும் வந்து சிக்கந்தர் படத்தைக் கொடுத்தால் அந்த படமும் செம போராக இருந்து ஃபிளாப் ஆனது. ஹாரிஸ் ஜெயராஜும் காப்பி சர்ச்சையில் சிக்கினார். மீண்டும் அவர் கம்பேக் கொடுத்தாலும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விடாமுயற்சி படம் பிரேக்டவுன் படத்தின் காப்பி என கிளம்பிய சர்ச்சை காரணமாக பெரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. லியோ படத்தின் பாடல் ஒன்றும் காப்பி கேட் சர்ச்சையில் சிக்கியது.

இளையராஜா நோட்டீஸ்: காப்பி சர்ச்சை வரக்கூடாது என்பதற்காக பல இசையமைப்பாளர்கள் இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களையே தங்கள் படங்களில் வைத்து கல்லா கட்டுகின்றனர். ஆனால், அவரிடம் பெயருக்காக கூட அனுமதி வாங்க மறுக்கின்றனர். கூலி படத்தின் அறிவிப்பு வீடியோவில் இடம்பெற்ற டிஸ்கோ பாடலுக்காக அவர் நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையை கிளப்பியது.

கூலி பாடல் காப்பியா?: இந்நிலையில், கூலி படத்துக்கு அடுத்த சர்ச்சையாக அனிருத் இசையில் உருவாகியுள்ள 'விசிலு பறக்கட்டுமே' பாடல் காப்பி என சில நெட்டிசன்கள் வெளிநாட்டு ஆல்பம் பாடல் ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர். Lil Nas X - Industry Baby ஆல்பம் பாடலை அப்படியே சுட்டு அனிருத் ரஜினிகாந்தின் கூலி படத்தின் பாட்டுக்கு பயன்படுத்தியிருப்பதாக கூறுகின்றனர்.

மியூசிக் சாம்ப்ளிங்: அனிருத் இசையை திருடவில்லை என்றும் அதே போல அவர் இசையை உருவாக்காமல் மியூசிக் சாம்ப்ளிங் முறைப்படி வாங்கி அதை தமிழ் சினிமா பாடலுக்கு ஏற்றவாறு உருவாக்கி பயன்படுத்தி வருகிறார் என அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக அவர் வாங்கி பயன்படுத்துகிறாரா என்பது தான் கேள்வியே என நெட்டிசன்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். திடீரென அனிருத்துக்கு பெரிய படங்கள் குறைந்து சாய் அபயங்கருக்கு செல்வதற்கும் இதுதான் முக்கிய காரணம் என்றும் பேசிக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X