டேய் போதும்டா.. எல்லை மீறும் பீலிங்ஸ்.. ஏடாகூடமா ஆடும் இளம் பெண்கள்.. எங்கே போய் முடியப்போகுதோ?

ஹைதராபாத்: இந்த ஆண்டின் மிகவும் மோசமான பாடல் என்றே ரசிகர்கள் பலரும் பீலிங்ஸ் பாடலை திட்டி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் அந்த பாடலின் வரிகள் மற்றும் உச்சகட்ட கவர்ச்சி தான் என்கின்றனர். ஆனால், அப்படி இருந்தால் தான் இளம் ரசிகர்கள் அதிகம் அதை பார்த்து பீலிங்ஸ் ஆகி வருகின்றனர் என்றும் கூறுகின்றனர்.

புதிய பாடல்கள் வந்தாலே அதற்கு ஏகப்பட்ட ரீல்கள் சமூக வலைதளங்களில் குவிந்து விடுகின்றன. பீலிங்ஸ் பாடலுக்கு இலக்கியா போட்ட ஆட்டத்தை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போய் பார்க்கவே முடியாத அளவுக்கு ஆபாசத்தின் உச்சமாக உள்ளது.

pushpa 2 allu arjun rashmika mandanna 2

இந்நிலையில், ஏகப்பட்ட இளைஞர்களும் இளம்பெண்களும் அந்த பாடலுக்கு அப்படியே நடனமாட வேண்டும் என ஏடாகூடமாக நடனமாடி ரீல்ஸ் போட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

70 மில்லியன் வியூஸ்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற பீலிங்ஸ் பாடல் தெலுங்கு வெர்ஷனிலேயே 70 மில்லியன் வியூக்களை அள்ளியுள்ளது. தமிழில் சமீபத்தில் வெளியான முழு வீடியோ பாடலும் 2 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்துள்ளது. ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த பாடலுக்கு எதிராக எக்கச்சக்க ட்ரோல்களும் மீம்களும் குவிந்து வருகின்றன.

ஏடாகூட ஆட்டம்: பீலிங்ஸ் பாடலில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா பல கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு அப்படி ஓவர் கிளாமராக ஆட்டம் போட்டுள்ளனர். ஆனால், அதை பார்த்துவிட்டு ஏகப்பட்ட இளைஞர்கள் இஷ்டத்துக்கு ஏடாகூடமாக ஆட்டம் போட்டு வருகின்றனர் என்றும் எல்லாமே ஆபாசத்தின் உச்சமாக உள்ளது என்றும் நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

டேய் போதும்டா: ஆந்திராவை சேர்ந்த இளைஞர்கள் இருவர் அப்படியே அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆடியது போன்ற ஸ்டெப்புகளை போட்டு பீலிங்ஸ் பாட்டுக்கு ஓவர் பீலிங்ஸ் உடன் போட்டுள்ள ரீல்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் டேய் போதும்டா என கமெண்ட் போட்டு அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர். மேலும், இது எங்கே போய் முடியப்போகுதோ என்றும் பீலிங்ஸ் ஜாஸ்தியாகி எதுவும் பண்ணிடாதீங்கடா என்றும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

அல்லு அர்ஜுன் தான் காரணம்: இதற்கும் அல்லு அர்ஜுன் தான் காரணம் என்றும் சமந்தா ஆடியதை விட மோசமாக ராஷ்மிகா இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்றும் குழந்தைகள் எல்லாம் இந்த பாடலுக்கு ரீல்ஸ் போட்டு ஆடுவது தான் இன்னமும் கொடுமையான விஷயம் என்று பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X