ஓ மணப்பெண்ணே படத்தின் சகியே வீடியோ பாடல் வெளியானது!

சென்னை : நடிகர் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரிலீசான படம் ஓ மணப்பெண்ணே.

Recommended Video

Oh Manapenne வந்தது இப்படி தான் | Harish Kalyan | Priya Bhavani Shankar

இந்தப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சகியே என்ற வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

ஓ மணப்பெண்ணே படம்

ஓ மணப்பெண்ணே படம்

நடிகர் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசான படம் ஓ மணப்பெண்ணே. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான பெல்லி சூப்புலு வெற்றிப் படத்தை தமிழில் ரீமேக் செய்திருந்தார்கள்.

தெலுங்கு படத்தின் ரீமேக்

தெலுங்கு படத்தின் ரீமேக்

இந்தப் படம் பெல்லி சூப்புலுவையே ஓரங்கட்டும் வகையில் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் இந்தப் படம் உருவான நிலையில், ஹரீஷ் மற்றும் ப்ரியா பவானி சஙகர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறப்பான இயக்கம்

சிறப்பான இயக்கம்

காதல் காட்சிகளே இல்லாமல் ஒரு காதலை சிறப்பாக சொல்ல முடியும் என்பதை ஒரிஜினல் கதையை சிதைக்காமல் சிறப்பாக கையாண்டிருந்தார் இயக்குநர். இந்நிலையில் இந்தப் படத்தின் சகியே வீடியோ பாடல் தற்போது யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ பாடல் வெளியீடு

ஹரீஷ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் இடையிலான ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், காதல் உள்ளிட்டவற்றை இந்தப் பாடல் சிறப்பாக காட்டுகிறது. பாடலை யாழின் நிசார் சிறப்பாக பாடியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைப்பில் பாடல்கள் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளன.

எமோஷனலான கதை

எமோஷனலான கதை

தவறான இடத்திற்கு பெண் பார்க்க செல்லும் ஒரு இளைஞன் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழும் சுவாரஸ்யங்கள் பிரச்சினைகள் ஆகியவற்றை இந்தப் படம் சொல்கிறது. படத்தில் காதல், எமோஷன்களுக்கு பஞ்சமில்லாமல் திரைக்கதையை அமைத்திருந்தார் இயக்குநர்.

சிறப்பான ஹரீஷ், ப்ரியா பவானி சங்கர்

சிறப்பான ஹரீஷ், ப்ரியா பவானி சங்கர்

ஹரீஷ் கல்யாணிற்கு அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் அமைந்த நிலையில், இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. ப்ரியா பவானி சங்கரும் மிகவும் சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். கொள்ளை அழகாகவும் காட்சியளிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X