»   »  புதிய நகாசுடன்.. பழைய "பளிங்கு மாளிகை"...!

புதிய நகாசுடன்.. பழைய "பளிங்கு மாளிகை"...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்பொழுது இருக்கும் சினிமா துறையை ரீமேக் உலகம் என்றே கூறலாம். ஏனென்றால் அவ்வளவு ரீமேக் படங்கள், பாடல்கள், கதைகள் என உலகம் எங்கெங்கோ சென்றாலும், கடந்த காலத்தில் பூத்த சில அழகிய கவிதைகளை மீண்டும் புதுப்பொலிவாக புதுப்பித்து நமக்கு அளிக்கவும் இந்த சினிமா உலகில் நேரம் இருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது இரு பழைய பாடல்கள் மீண்டும் இசையமைக்கப்பட்டு இரு கவர் ஆல்பமாக வெளியாகியுள்ளது. ஒன்று பளிங்கினால் ஒரு மாளிகை, இன்னொன்று ஏ.ஆர்.ரஹ்மானின் ஜூலை மாதம்... பளிங்கினால் ஒரு மாளிகை பாடல் வல்லவன் ஒருவன் என்ற திரைப்படத்தின் பாடலாகும். இதற்கு இசையமைத்தவர் வேதா. புதிய முகம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஜூலை மாதம் பாடலுக்கு இசையமைத்தவர் ஏ ஆர் ரஹ்மான்.. இவ்விரு மெலோடி பாடல்கள் தான் தற்போது புது பொலிவுடன் வெளியாகியுள்ளது.

Palinginaal oru maaligai and July madham cover song

இவ்விரு பாடல்களையும் எடுத்துக்கொண்டு அதன் மெட்டுகள் அடங்கிய இசையை இன்றைய தலைமுறையினர்களுக்கு ஏற்ப இசையை மட்டும் மாற்றி இசைத்துள்ளனர். இப்பாடல்களை தயாரித்தவர்கள், சைன்ட்டுயுன்ஸ் (Saintunes) நிறுவனத்தின் தாளாளர், குரல்வளம் ஆசிரியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதி பரிந்துரையாளர் கர்நாடக இசைப் பாடகர் ஸ்ரீ அனந்த் வைத்தியநாதன் ஆகியோர்.

Palinginaal oru maaligai and July madham cover song

இப்பாடல்களை பாடியவர் சூப்பர் சிங்கர் போட்டியில் இறுதி சுற்றுக்கு தேர்வான, லக்ஷ்மி பிரதீப். தயாரிப்பாளராக லைன் ப்ரொடக்சன் கே ஜி ஸ்ரீனிவாசன், பாடல்களை திட்டமிட்டவர்களாக அனீஸ் மோகன் மற்றும் ஆர் குமார் நாராயணன், இதில், அனீஸ் மோகன் கீபோர்ட் இசைக்க, ஜித்தின் ரோஷன் வயலின் இசைக்கின்றார். பசந்த் முரளிகிருஷ்ணன் சாக்ஸ் இசைத்துள்ளார். அனீஸ் மோகன், ஆர் குமார் நாராயணன் மற்றும் ஜகன் கல்யாண் ஆகியோர் இப்பாடல்களுக்கு சவுண்ட் இஞ்சினியர்களாக பணியாற்றியுள்ளனர்.

Palinginaal oru maaligai and July madham cover song

பாடல் மற்றும் பாடிலின் வீடியோ இரண்டையும் இதே நிறுவனமே வெளியிட்டுள்ளது. இப்பாடல்களுக்கும், காட்சிகளுக்கும், DOP குரு ராஜேந்திரன். எடிட்டராக ராபின்சன் ஆகியோர் இப்படல்களுக்காக பணியாற்றியுள்ளனர். சைன்டுன்ஸ் ஸ்டுடியோவில் தான் இப்பாடல்களின் உருவாக்கமும், வெளியீடும் நடைப்பெற்றது. இப்பாடல்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The Old evergreen melody songs palingunaal oru maalikai and july matham both songs are re-arranged the music to suit to the tastes of the present generation. The idea behind the cover was to fuse a really old evergreen song along with a relatively new hit number, which would be a pleasing combination and yet maintain the original flavour.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more