#Petta விழா மேடையில் சொதப்பி சூப்பரா சமாளித்த பாபி சிம்ஹா
சென்னை: பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பாபி சிம்ஹா சொதப்பிவிட்டார்.
பேட்ட இசை வெளியீட்டு விழா அறிவித்த நேரத்தில் துவங்கியது. முதலில் சர்கார் உள்ளிட்ட பட பாடல்களுக்கு நடனக் கலைஞர்கள் நடனம் ஆடினார்கள். அதன் பிறகு வரவேற்புரை நிகழ்த்தியவர் கலாநிதி மாறனின் மனைவி பெயரை தவறாக சொல்லி சொதப்பினார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விக்னேஷ்காந்தும், நக்ஷத்ராவும் ரஜினியே வெட்கப்படும் அளவுக்கு ஓவராக ஐஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஷப்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே.
இந்நிலையில் முதல் ஆளாக மேடைக்கு வந்து பாபி சிம்ஹா கூறியதாவது,
பொங்கலுக்கு வர்றோம்ங்க. பேட்ட பராக். ரஜினி சாருடன் சேர்ந்து நடித்தது பெரிய விஷயம். நான் கொடுத்து வைத்தவன். அவரை நேரில் பார்ப்பேனா என்று நினைத்த நான் அவருடன் சேர்ந்து நடித்துள்ளேன். நான் அவரை பார்ப்பது ஒரு பக்தன் கடவுளை பார்ப்பது போன்று என்றார்.
அண்ணாமலை படத்தில் ரஜினி பேசிய வசனத்தை பேசிக் காட்டினார் பாபி சிம்ஹா. கடகடவென பேசுகிறேன் என்ற பெயரில் சொதப்பிவிட்டார் அவர். சொதப்பியதை புரிந்து கொண்டு ரஜினி போன்று அவரால் மட்டுமே பேச முடியும் என்று கூறி சமாளித்தார் அவர்.


Click it and Unblock the Notifications











