இன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'இந்த 2' தான்
Recommended Video

சென்னை: பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
இந்த விழாவில் கலந்து கொண்டு ரஜினி பேச உள்ளார்.

எதிர்பார்ப்பு
பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுகிறார் என்றதுமே அனைவருக்கும் அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ரஜினி ரசிகர்கள் இவர் இரண்டு விஷயங்கள் பற்றி இன்று மேடையில் பேசுவார் என்று பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்களின் ஒரு எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும், மற்றொன்று தான் உறுதி இல்லை.

அரசியல்
பேட்ட படத்தில் நடித்தபோது நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து ரஜினி பேசுவார் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை விட முக்கியமாக அரசியலுக்கு வருவது குறித்து ஒரு முடிவை அறிவிப்பார் என்று தான் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்ட
இன்றைய நிகழ்ச்சியில் தற்போது தமிழகத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றியும் அரசியல் பற்றியும் ரஜினி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.0 விழா போன்று இந்த விழாவிலும் அவர் அரசியல் குறித்து பொடி வைத்து பேசக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கட்சி
வர்றோம், வர்றோம் என்று கூறி வரும் ரஜினிகாந்த் தான் முழு நேர அரசியல்வாதி ஆவது எப்பொழுது என்று இன்னும் தெளிவாக கூறவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்து புதுப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிக் கொண்டிருக்கிறார். அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து தெளிவாக பேசினால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











