பேட்ட படப் பாடல்கள்.. டிசம்பர் 9ல் வெளியீடு #PettaAudiofromDec9th
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்க, கார்த்திக் சுப்பராஜ் இக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் பாடல்கள் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா உள்ளிட்டோர் நடிக்க உருவாகியிருக்கும் படம் பேட்ட. இப்படத்தின் ஆடியோ டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள டிவீட்டில் டிசம்பர் 9ம் தேதி பேட்ட படப் பாடல்கள் ரிலீஸாகும். டிசம்பர் 3ம் தேதி படத்தின் முதல் சிங்கிளும், டிசம்பர் 7ம் தேதி 2வது சிங்கிளும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை என்பதால் ரஜினி + அனிருத் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications