யுவன் இசையில் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் வீடியோ பாடல் வெளியானது!

சென்னை : நடிகர் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிளான் பண்ணி பண்ணனும்.

நிதி நெருக்கடியால் இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளி போனது.

இந்நிலையில் யுவன்சங்கர் ராஜா இசையில் படத்தின் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பிளான் பண்ணி பண்ணனும் படம்

பிளான் பண்ணி பண்ணனும் படம்

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் பிளான் பண்ணி பண்ணனும். முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஆயினும் படம் தொடர்ந்து ரிலீஸ் தள்ளிப் போனது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

படத்தில் மேலும் முனீஷ் காந்த், பாலசரவணன், ரோபோ ஷங்கர், ஆடுகளம் நரேன், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இறுதியாக கடந்த செப்டம்பர் மாதத்தில் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக மீண்டும் ரிலீஸ் தள்ளிப் போனது.

பத்ரி வெங்கடேஷ் இயக்கம்

பத்ரி வெங்கடேஷ் இயக்கம்

படத்தை பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் தயாரித்துள்ளார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள முந்தைய படமான பானா காத்தாடி அவருக்கு சிறப்பான பெயரை பெற்றுக் கொடுத்துள்ள நிலையில் தற்போது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வீடியோ பாடல் ரிலீஸ்

இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரியோ மற்றும் ரம்யாவின் மெலடி நம்பராக இந்தப் பாடல் அமைந்துள்ளது. தன்னுடைய படத்திற்கு யுவன் இசையமைப்பது தன்னுடைய கனவு என்று முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் ரியோ தெரிவித்திருந்தார்.

காமெடி கலாட்டா

காமெடி கலாட்டா

இந்தப் பாடல் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. ரம்யா இந்தப் பாடலில் மிகவும் அழகாக காணப்படுகிறார். சிறப்பான கோணங்களில் பாடல் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில் அனைவரையும் இந்தப் படம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வித்தியாசமான தலைப்பு

வித்தியாசமான தலைப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக பல சிறிய பட்ஜெட் படங்கள் முடங்கியுள்ளன. அந்தவகையில் காமெடி தூக்கலாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு பிளான் பண்ணி பண்ணனும் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் ரிலீசை தயாரிப்பாளர் பிளான் செய்ய வில்லையோ என்ற கமெண்ட்களை ரசிகர்கள் முன்னதாக பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X