பிரபு தேவாவின் ரொமாண்டிக் மெலடி பாடல் வெளியீடு... ஓடிடியில் ரிலீசாகும் பொன் மாணிக்கவேல்

சென்னை : நடிகர் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன் மாணிக்கவேல்.

இந்தப் படம் வரும் 19ம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் மெலடி பாடல் ஒன்றை இன்றைய தினம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தியிலும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். தமிழிலும் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பிசியாக காணப்படுகிறார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

அவரது நடிப்பில் தேள், யங் மங் சங், ஊமை விழிகள் பஹீரா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்தப் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் ட்ரெயிலர் வெளியாகி பாராட்டுக்களை பெற்றுள்ளது.

மிரட்டலான பஹீரா படம்

மிரட்டலான பஹீரா படம்

சைக்கோ த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் பெண்களை காதலித்து கொலை செய்யும் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ளார். படத்தின் ட்ரெயிலர் மிரட்டலாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பொன் மாணிக்கவேல் ரிலீஸ்

பொன் மாணிக்கவேல் ரிலீஸ்

இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படம் வரும் 19ம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பைனான்ஸ் நெருக்கடி காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.

காவல்த்துறை அதிகாரி

காவல்த்துறை அதிகாரி

இந்நிலையில் வரும் 19ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பெரிய தொகை கைமாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏசி முகில் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக பிரபுதேவா நடித்துள்ளார்.

மெலடி பாடல் வெளியீடு

மெலடி பாடல் வெளியீடு

நிவேதா பெத்துராஜ், மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஞானசம்பந்தம், பாகுபலி பிரபாகர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் மெலடி ரொமாண்டிக் பாடல் ஒன்றை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மிகவும் அழகான வரிகளில் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது இந்தப் பாடல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X