என்ன இப்படி இறங்கிட்டாங்க.. மதுவை விளம்பரப்படுத்தும் முன்னணி நடிகைகள்.. ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: திரைப்படங்களிலேயே 'மது அருந்துவது உடலுக்கு தீங்கானது' என பெரிய கார்டு போடப்படும் நிலையில், செம கூலாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்கள் சமூக வலைதளங்களில் விஸ்கியை விளம்பரப்படுத்தி வருவதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

நடிகை பூஜா ஹெக்டே, ராய் லக்‌ஷ்மி மற்றும் ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகளே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மது விளம்பரத்தை சர்வ சாதாரணமாக விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

கமெண்ட் பக்கத்தில் ஏகப்பட்ட நெட்டிசன்கள் நடிகைகளை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் விளம்பரம்

இன்ஸ்டாகிராம் விளம்பரம்

அழகு சாதன பொருட்கள், ஆடைகள் என ஏகப்பட்ட பொருட்களை நடிகைகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்து காசு பார்த்து வருகின்றனர். சில தரமற்ற பொருட்களை நடிகைகள் ரசிகர்களை ஏமாற்றி வாங்க வைப்பதகாவும் சில மாதங்களுக்கு முன்பு மோசடி குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

விஸ்கி விளம்பரம்

விஸ்கி விளம்பரம்

இந்நிலையில், அதையெல்லாம் மிஞ்சும் விதத்தில் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராய் லக்‌ஷ்மி மற்றும் ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட பிரபல நடிகைகள் தற்போது விஸ்கி விளம்பரத்தை செம கூலாக செய்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பீஸ்ட் ஹீரோயின்

தளபதி விஜய்யின் பீஸ்ட் பட ஹீரோயின் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜானி வாக்கர் விஸ்கியை விளம்பரப்படுத்தும் வீடியோவையே ஷேர் செய்து வைரலாக்கினார். இது ரொம்ப தப்பு புட்டபொம்மா என ரசிகர்கள் அவரது கமெண்ட் பக்கத்தில் கண்டித்து கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

விஸ்கியுடன் ராய் லக்‌ஷ்மி

விஸ்கியுடன் ராய் லக்‌ஷ்மி

ஜப்பான் நாட்டின் டோக்கி எனும் விஸ்கியை நடிகை ராய் லக்‌ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப்படுத்தி உள்ளார். டோக்கி என்றால் ஜப்பான் மொழியில் நேரம் என்றும் விளக்கம் கொடுத்து படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தையும் ஷேர் செய்து விளம்பரப்படுத்த ரசிகர்கள் அந்த போஸ்ட்டையும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஹன்சிகாவின் விளம்பரம்

ஹன்சிகாவின் விளம்பரம்

பூஜா ஹெக்டே, ராய் லக்‌ஷ்மியை தொடர்ந்து நடிகை ஹன்சிகாவும் இந்த Paid Promotion விளம்பரத்தை செய்துள்ளார். நடிகை ஹன்சிகாவும் ராய் லக்‌ஷ்மி விளம்பரம் செய்த அதே டோக்கி விக்ஸியின் விளம்பரத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சியர்ஸ் சொல்லி உள்ளார்.

Recommended Video

Prabhu Deva வுக்காக நான் எடுத்த சபதம் | Actress Samyuktha Hegde |Thael Audio Launch |Filmibeat Tamil
ரசிகர்கள் கண்டனம்

ரசிகர்கள் கண்டனம்

திரைப்படங்களில் மது குடிக்கும் காட்சி இடம்பெற்றாலே 'Liquor drinking is Injurious' 'மது அருந்துவது உடலுக்கு தீங்கானது' உள்ளிட்ட எச்சரிக்கை கார்டுகள் போடப்படும். ஆனால், சர்வ சாதாரணமாக உணவுடன் மதுவையும் இணைத்து அருந்துங்கள் என பிரபல நடிகைகள் இப்படி விளம்பரப்படுத்துவது தவறான விஷயம் ஆகும் என்றும் இளைஞர்களை தவறான பாதைக்கு நடிகைகள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்றும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X