நான்கு மொழிகளில் வெளியான ராதே ஷ்யாம் படத்தின் லிரிக் வீடியோ... ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐதராபாத் : நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது ராதே ஷ்யாம் படம்.
அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் லிரிக் வீடியோ பாடல் 4 மொழிகளில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் பிரபாஸ்
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின்மூலம் இந்திய அளவில் ரசிகர்களை கொண்டுள்ளார். இந்தப் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பிரபாஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூல்மழையையும் பாராட்டு மழையையும் பொழிந்தது.

ராதே ஷ்யாம் படம்
தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வரும் பிரபாஸ் நடிப்பில் தற்போது ராதே ஷ்யாம் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. பொங்கலையொட்டி இந்தப் படம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான வரவேற்பு
இந்தப் படத்தை யூவி கிரியேஷன்ஸ் மற்றும் டீ சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சீனா மற்றும் ஜப்பானிய மொழிகளில் ரிலீசாக உள்ளது.

மிரட்டலான டீசர்
கடந்த மாதத்தில் பிரபாசின் பிறந்தநாளையொட்டி படத்தின் மிரட்டலான டீசர் வெளியானது. படத்தில் விக்ரமாதித்யா என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளது டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தில் சச்சின் கடேகர், பிரியதர்ஷி, பாக்யஸ்ரீ, ஜெகபதி பாபு, முரளி சர்மா, ரிதி குமார், ஷாஷா செத்திரி, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மெலடி பாடல் வெளியீடு
படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவரும் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் படத்தின் பாடல் ஒன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா பாடல்
தமிழில் மதன் கார்க்கி வரிகளில் யுவன்சங்கர் ராஜா மற்றும் ஹரிணி இந்தப் பாடலை பாடியுள்ளனர். சிறப்பான மெலடியாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கார்ட்டூன் கேரக்டர்களை கொண்டு பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. சிறப்பான வகையில் உள்ளது இந்தப் பாடல்.


Click it and Unblock the Notifications











