நடிகர் பிரபுதேவாவின் தேள் படம்... இன்று இசை வெளியீடு
சென்னை : நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் தேள் படம் உருவாகி வருகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் இசை வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் பிரபு தேவா
நடிகர் பிரபு தேவா பன்முக கலைஞராக உள்ளார். நடிப்பு, இயக்கம், நடனம், தயாரிப்பு என கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் அவர், தமிழ் படங்களில் தொடர்ந்து பல்வேறு சிறப்பான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

பொன் மாணிக்கவேல் படம்
காவல் உயரதிகாரியாக பிரபு தேவா நடித்துள்ள படம் பொன் மாணிக்க வேல். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதையடுத்து சைக்கோ கொலைகாரனாக பஹீரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

ஹரிக்குமார் இயக்கத்தில் தேள் படம்
இந்நிலையில் பிரபுதேவா நடிப்பில் ஹரிக்குமார் இயக்கிவரும் படம் தேள். கமர்சியல் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் மதுரையை சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தை ஹரிக்குமார் இயக்கியுள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு
படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் சார்பில் கேஇ ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைத்துள்ளார் சத்யா. அவரது இசையமைப்பில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விரைவில் ட்ரெயிலர்
படத்தில் பிரபுதேவாவுடன் சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். பாடலாசிரியராக விவேகா, உமாதேவி உள்ளிட்டவர்கள் பணிபுரிந்துள்ளனர். விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ட்ரெயிலர், டீசர் உள்ளிட்டவற்றையும் எதிர்பார்க்கலாம்.

இன்று முதல் இசை
இசை வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழுவினர் பிரபுதேவாவின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் ஆக்ரோஷமான பிரபு தேவாவை பார்க்க முடிகிறது. மேலும் அலட்சியமாக அவர் அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது.


Click it and Unblock the Notifications











