ஊசியால குத்துவான்.. ஹார்ன் அடிப்பானா?.. எல்லாமே டபுள் மீனிங்.. பிரபுதேவா பாடலை விளாசும் ரசிகர்கள்!
சென்னை: கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபுதேவா தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ”சின்ன மச்சான் செல்ல மச்சான்” பாடலுக்கு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடனமாடிய பிரபுதேவா அந்த பாடலை மிகப்பெரிய வெற்றி பாடலாக மாற்றினார்.
மீண்டும் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் ஜாலியோ ஜிம்கானா படத்தில் இடம்பெற்றுள்ள ” ஒரு போலீஸ்காரனை கட்டிக்கிட்டா லத்தியை வச்சு அடிப்பான்” என்கிற பாடல் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது.

பிரபுதேவா மற்றும் மடோனா செபாஸ்டியன் நடனமாடி உள்ள அந்த பாடலில இடம்பெற்றுள்ள அனைத்து வரிகளும் டபுள் மீனிங் வரிகள் தான் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பீப் பாடல் சர்ச்சை: தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு பீப் பாடலை உருவாக்கினார் என கிளம்பிய சர்ச்சை பெரிதளவில் வெடித்தது. படத்துக்காக அந்த பாடலை உருவாக்கவில்லை என்றும் பிரைவேட் பாடல் என்றும் கூறப்பட்டாலும் அதற்காக ஏகப்பட்ட கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. பெண்களை கொச்சைப்படுத்தியும் "அடிடா அவள உதைடா அவள" உள்ளிட்ட தனுஷ் பாடல்களுக்கும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில், சமீப காலமாக டபுள் மீனிங் பாடல்கள் குறைந்து வருகின்றன.
பாடல்களில் டபுள் மீனிங்: ”புது வெள்ளை மழை” என ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து ரோஜா படத்தில் இடம்பெற்ற பாடல் முதல் பல தமிழ் சினிமா பாடல்களில் டபுள் மீனிங் அர்த்தங்கள் காதலையும் காமத்தையும் வெளிப்படுத்த பாடலாசிரியர்கள் நடத்திய வார்த்தை விளையாட்டுக்கள் என ”செக்கச் சிவந்த பழம்”, “மார்க்கெட் போகாத குண்டு மாங்காய்” என நிறைய பாடல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பெண்களை வர்ணிக்கும் விதமாகவும் உடலுறவு குறித்த விஷயங்களை சொல்வதுமாகவே பாடல் வரிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்போ புரியல.. இப்போ புரியுது என 90ஸ் கிட்ஸ் கண்டுபிடித்து மீம் போட்டும் வருகின்றனர்.
ஊசியால குத்துவான்.. ஹார்ன் அடிப்பான்: சமீபகாலமாக அது போன்ற டபுள் மீனிங் பாடல்கள் திரைப்படங்களில் வராமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் தற்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபஸ்டியன் நடித்துள்ள ஜாலியோ ஜிம்கானா படத்தில் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் உருவாகியுள்ள “ஒரு போலீஸ்காரனை கட்டிக்கிட்டா லத்தியை வச்சு அடிப்பான்.. டாக்டரை கட்டிக்கிட்டா ஊசியால குத்துவான், டிரைவரை கட்டிக்கிட்டா ஹார்ன் அடிப்பான் .. வேலைவெட்டி இல்லாதவனை கட்டிக்கிட்டா எனக்கு மட்டும் வேலை செய்யுவான்” என ரொம்பவே மோசமான வரிகள் இடம்பெற்ற பாடலாக அந்த பாடல் உருவாகியுள்ள நிலையில், சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அதனை ஷேர் செய்து எப்படிப்பட்ட வரிகள் என கலாய்த்து வருகின்றனர். சின்ன பசங்க எல்லாம் இதை பாடி நடனம் ஆடினால் நல்லாவா இருக்கும் என சமூக ஆர்வலர்கள் திட்டியும் கண்டித்தும் வருகின்றனர்.
ஜமாய்க்கும் பிரபுதேவா: சன்னி லியோன், வேதிகா, மடோனா செபாஸ்டியன், அனுஷ்கா என தொடர்ந்து ஏகப்பட்ட நடிகைகளுடன் பல படங்களில் நடித்து ஜமாய்த்து வருகிறார் பிரபுதேவா. சார்ளி சாப்ளின் 2 படத்தில் நிக்கி கல்ராணியுடன் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஆட்டம் போட்ட அவர் தற்போது அதே சக்தி சிதம்பரம் இயக்கத்தில் மடோனா செபாஸ்டியன் உடன் இந்த பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்டுள்ளார். அதிலும், அந்த மிக்சர் மாமா கெட்டப் வேறலெவல் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











